தமிழ்நாடு

கரூர் விவகார குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரா? - தொடரும் சிபிஐ விசாரணை… சரமாரியாக கேள்வி எழுப்பும் அதிகாரிகள்!

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் பிரச்சாரம் மேற்கொண்டது ஏன்...

Mahalakshmi Somasundaram

கரூரில் கடந்த ஆண்டு (செப்டம்பர் 27) ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு சிபியை விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி அதிகாரிகள் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவரை விசாரணை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கடந்த (ஜன 12) தேதி விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை செயலகத்தில் விசாரணை ஆஜரான நிலையில் அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் கட்ட விசாரணை விஜய்யின் கோரிக்கையின் பேரில் ஒத்திவைத்த சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விஜய்யை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி இருந்தனர்.

எனவே இன்று மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை செயலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய்யிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன்? கூட நெரிசல் இருந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா? கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் பிரச்சாரம் மேற்கொண்டது ஏன்? குறிப்பிடட அளவை விட அதிக மக்கள் கூடியதற்கான காரணம் என்ன? தண்ணீர் பாட்டில்களை கொடுக்கும்போது கூடவா கூட நெரிசலை கவனக்கவில்லை? என சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஒரு சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்த நிலையில் மேலும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க நேரம் கேட்டிருப்பதாகவும், “நான் முழுமையாக தமிழக காவல்துறையினர் வழிகாட்டுதலுக்கு இணங்க” நடந்து கொண்டதாக தெரிவித்தார். என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கரூர் விவகாரத்தில் அடுத்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அதில் விஜய்யின் பெயர் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.