karur stampade issue  
தமிழ்நாடு

கரூர் துயரம்; பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறதா திமுக..!? சரமாரியாக கேள்வி எழுப்பும் அதிமுக!!

நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு...

மாலை முரசு செய்தி குழு

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைகப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் சொன்ன காத்திரமான கருத்துக்களை எதிர்த்துதான் தவெக உச்சநீதிமன்றம் சென்றது, கரூர் சம்பவம் ஒரு ‘Man Made Disaster’, விஜய்  -க்கு கொஞ்சம்கூட தலைப்பண்பு இல்லை என கடுமையாக விமர்சித்திருந்தது. அதுவரை கரூர் சம்பவத்திற்கு திமுக மட்டுமே காரணம் என்றிருந்த சூழல் மாறி விஜய் -ம் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் நீதிமன்றம் அந்த முறையீட்டை  கிடப்பில் போட்டுள்ளது. மேலும் இந்த மனுக்களை எல்லாம் ஆய்ந்த  உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, “உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரித்தது, SIT (சிறப்பு புலனாய்வு குழு) கேட்ட இடத்தில் Sop கொடுக்கப்பட்டது ஏன் என பல கேள்விகளை  எழுப்பியது? மேலும் தவெக -வின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர், சாமானிய தனி மனிதரின் கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட  பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணையை முக்கிவிட்டுள்ளது, உச்சநீதிமன்றம் என சொல்லப்படுகிறது, இந்நிலையில் இதுகுறித்து மிகவும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,

“தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள திரு.பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று, திமுக வழக்கறிஞரான பி.வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார்.

ஏன் பதறுகிறீர்கள் திமுக -வினரே? என்ன தவறு செய்தீர்கள்?

வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்? 

நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்?

திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.

வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.