கரூர் சம்பவம் குறித்து குர்து சென்னை விமான நிலையத்தில் பேசிய பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா “எங்களுடைய உறவுகளான 41 நபர்களை இழந்து அவர்களின் குடும்பத்தின் வலிகளோடு ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து கொண்டு இருக்கிறோம். 16 நாட்கள் காரியம் முடியும் வரை எந்தவித அரசியல் கருத்துக்களையும், எங்கள் மீது வைக்கப்படும் பொய்யான அவதூறுகளுக்கு நாங்கள் பதில் சொல்லாமல் அவர்களுடன் துணை நிற்கின்றோம்.
அந்த 16 நாட்கள் முடிந்த பிறகு என்ன உண்மைகளோ அந்த உண்மைகளை கண்டிப்பாக சொல்லுவோம் எங்க தலைவர் மீதும் கட்சியின் மீதும் ஒரு பொய்யான குற்றசாட்டுகளை எழுப்பி எங்கள் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையையும், இந்த இழப்பையும் இந்த வலிகளையும் மக்களோடு இணைந்து அமைதியாக இருக்கிறோம். எங்கள் கட்சியை முடக்க நினைக்கும் போது தலைவர் சாமானிய மனிதரின் நம்பிக்கையாக நீதித்துறையை நாடி உண்மையை வெளிக்கொண்டு வரும் எங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்கான பயண திட்டத்தை அமைத்து கொண்டிருக்கிறோம். எங்கள் மாவட்ட நிர்வாகிகளை சட்டத்திற்கு மாறாக கைது செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை சட்டப்படி வெளிக்கொண்டு வருவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மற்றவற்றை 16 நாட்கள் முடிந்த பிறகு கண்டிப்பாக எல்லா உண்மைகளையும் நாங்கள் தெரிவிக்கிறோம்” என கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.