stampade in tvk campaign 
தமிழ்நாடு

கரூர் துயரம்; “என் புருஷன பாக்க விடுங்க” - 9 மாத கர்ப்பிணி கதறித்துடித்த அவலம்..!

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் ...

மாலை முரசு செய்தி குழு

நேற்றைய தினம், தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.

ஆனால் நேற்றைய தினம் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர்.  மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 40 -பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய  இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட 40 -பேரின் குடும்பத்தினர் சொல்ல முடியாத அளவுக்கு துயரில் ஆழ்ந்துள்ளனர், தங்களின் உறவுகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10 நிவாரணத்தை அரசு அறிவித்துள்ளது. மேலும் 9 மாத கர்ப்பிணியை வீட்டில் விட்டுவிட்டு தவெக -வினரின் பரப்புரையை காணச்சென்ற இளைஞர் ஒருவரும் கூட்ட நெரிசலில் உயிரிந்துள்ளார்.

இவரின் இறுதிச்சடங்கில், “என் புருஷன பாக்க விடுங்க” என வயிற்றில் குழந்தையுடன், கதறி அழுத்த காட்சி காண்போரின் நெஞ்சை உலுக்கி எடுத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.