தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்த நிலையில் அவர் வீட்டிற்கு சென்று தவெக நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 -ஆம் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து இது போன்ற கூட்டங்களை முறைப்படுத்தவும், சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கடையில் ஏழு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி ரோட் ஷோ மற்றும் பேரணிகள் நடத்த தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கதிரேசன் என்பவர் தான் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் இது விதிகள் பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்த கதிரேசன் வீட்டிற்கு நேரில் சென்று தவெக நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதி உத்தரவிட்ட பிறகு, எனது மனுதாரர் கதிரேசன் வசித்து வரும் வீட்டிற்கு நேரடியாக சென்ற தமிழக வெற்றிக்கழக பூதகுடி பகுதிகிளை கழகச் செயலாளர் வினோத் என்பவர் மிரட்டியுள்ளார். உடனே எனக்கு தொலைபேசி செய்தவுடன் அங்கிருந்து உடனடியாக வினோத்தும் அவருடன் வந்த மற்ற கட்சி நிர்வாகிகளும் புறப்பட்டு சென்று விட்டனர். வீட்டிற்கே வந்து மிரட்டல் விடுத்தைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இது விரைவில் விசாரணைக்கு வரும் என வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.