Admin
தமிழ்நாடு

கொடநாடு வழக்கு மையக்கட்டத்தை நோக்கி – முக்கிய நபராக சுதாகரன் விசாரணைக்கு அழைப்பு!

தனிப்படை முன்பு 27ஆம் தேதி சுதாகரன் ஆஜராக தற்போது சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Anbarasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிவையில், அவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கை சோலூர் மட்டம் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் படிக்க: "அதிமுக-வை இயக்கும் பாஜக" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் பரபரப்பு

அப்போது தனிப்படை போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, கொடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தற்கொலை வழக்கு, சேலம் அருகே கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளை தனித் தனியாக விசாரித்தனர். அதில் கொலை, கொள்ளை சம்பவத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையானது ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் என தொடர்ந்து சம்மன் அளித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: 2025 SUZUKI ACCESS 125 – நம்ம ஊருக்கேத்த ALL-ROUND ஸ்கூட்டர்!

இந்நிலையில் தற்போது கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்..

தனிப்படை முன்பு 27ஆம் தேதி சுதாகரன் ஆஜராக தற்போது சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முக்கிய நபர்களின் விசாரணை வட்டத்திற்குள் சென்ற நிலையில், சி.பி.சி.ஐ.டி சுதாகரனை விசாரிக்க திட்டமிட்டு சம்மன் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்