கொளத்தூர் MLA வி.எஸ். பாபு உயிரிழந்தார்.. 72 நாட்கள் சிகிச்சை.. என்ன சொல்கிறது மருத்துவமனை? 
தமிழ்நாடு

கொளத்தூர் MLA வி.எஸ். பாபு உயிரிழந்தார்.. 72 நாட்கள் சிகிச்சை.. என்ன சொல்கிறது மருத்துவமனை?

"அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 2026 நவம்பர் 19-ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு உயிரிழந்தார்." - MGM மருத்துவமனை

Antony Ajay R

மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக 2026 செப்டம்பர் 9-ஆம் தேதி MGM ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரும் சிறந்த சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 2026 நவம்பர் 19-ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு உயிரிழந்தார்.

இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு MGM ஹெல்த்கேர் மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது." எனக் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.