முதலமைச்சர் உடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிய மெட்டா.. ``இது பாசிசமா, பாயாசமா?" - TOI அருண் ராம்-க்கு நடந்தது என்ன?

விஜய் அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
Meta Removes CM VijayPhoto: What Happened to TOI’s Arun Ram After "Fascism or Payasam" Remark?
முதலமைச்சர் உடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிய மெட்டா.. ``இது பாசிசமா, பாயாசமா?" TOI அருண் ராம்-க்கு நடந்தது என்ன?
Published on: 
Updated on: 
2 min read

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையைச் சேர்ந்த ஆசிரியர் அருண் ராம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அட்ராசிட்டிகளில் ஈடுபடுவதாகவும் அதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதாகவும் சுட்டிக்காட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரை வெளியான பிறகு அவரது குழுவினருடன் முதல்வரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அருண் ராமின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்தும் நீக்கியுள்ளது மெட்டா நிறுவனம். "சட்டத் தேவைகளுக்கு இணங்க" அந்த புகைப்படம் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது சமூக வளைத்தள பதிவில், "இது பாசிசமா பாயாசமா?

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.

உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?

கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் இதுகுறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.

இதுகுறித்த அறிக்கையில், "சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்! தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!

சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.

Meta Removes CM VijayPhoto: What Happened to TOI’s Arun Ram After "Fascism or Payasam" Remark?
``அதிருப்தியில் 60 MLAகள்.. விரைவில் ஆட்சி மாற்றம்.." - கான்ஃபிடன்டாக சொல்லும் ரகுபதி! திமுக குதிரை பேரமா?

ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meta Removes CM VijayPhoto: What Happened to TOI’s Arun Ram After "Fascism or Payasam" Remark?
``சட்ட விரோதமாக அணை திறப்பு.. எவர் மீதும் நடவடிக்கை இல்லையா?" வருத்தத்தில் அன்புமணி பதிவு.. கைது செய்ய வலியுறுத்தல்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.