Vijay Assembly speech Vijay Assembly speech
தமிழ்நாடு

"5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடிவிட்டது.." 2021 ஆகஸ்ட் 2ல் திமுக செய்தது என்ன? ஆதாரத்தோடு திமுகவை தாக்கிய முதல்வர்!

அந்த மாநில உரிமை போராளிகளை, அந்த மரபு காக்கிற உரிமை போராளிகளை ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும்.

Vinvizhi Leninton

17வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது அவர் பேசிய 'பார்ட்டி ஃபண்ட்' என்ற வார்த்தையால் எதிர்கட்சினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறியும், தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் பேசுவதாக கூறியும் திமுக உறுப்பினர்கள் வெளியேறினார். மேலும், ஊழல் செய்பவர்களை விடமாட்டோம்; ஊழல் செய்தவர்களையும் விடமாட்டோம் என்று முதலைச்சர் பேசியதற்கு பிறகு திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, மீண்டும் தனது உரையை முதலைமைச்சர் ஜோசேப் விஜய் தொடர்ந்து உரையை வாசிக்க தொடங்கினார். மேலும், "5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடிவிட்டது, பின் பேசு பேசு என்றால் என்ன பேசுவது?" என்று திமுக வெளிநடப்பு குறித்து நக்கலாக பேசினார். மேலும், 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். மரபு, மீறியதாகவும் இதற்கு முன்பு சட்டப்பேரவையில் நடந்தது இல்லை என்று திமுகவினர் பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் விஜய்,"அந்த மாநில உரிமை போராளிகளை, அந்த மரபு காக்கிற உரிமை போராளிகளை ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். 2021 ஆகஸ்ட் 2 நியாபகம் இருக்கிறதா?. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் புகைப்படத்தை திறந்து வைக்கும் விழாவில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று கூறியது நினைவிருக்கிறதா?. விழா முடியும் போது கூட தேசிய கீதம் இரண்டாவது முறையாக மீண்டும் பாடப்பட்டது" என்று கூறினார். அதற்கு சபாநாயகர் அது இதே அவையில் நடந்ததாகவும் அது அவைகுறிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த புத்தகத்தை பார்க்கவும் என்று ஆதாரமாக ஒரு புத்தகத்தை காட்டினார். மேலும் திமுகவினர் பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது என்று முதல்வர் பேசினார். மேலும், ஒன்றிய அரசினுடனான நிர்வாக உறவு என்பது வேறு என்றும், தாங்கள் தெளிவாக இருப்பதாகவும், "எங்களுக்கு படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு உங்களுடைய வேஷத்தை கலைக்காதீர்கள்" என்றும் முதல்வர் எதிர்கட்சினரை பார்த்து அவையில் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.