கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடை மேம்பாலம், மரியபுரம் பகுதியின் அருகில் முதியவர் ஒருவர், சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால், பெண் ஒருவர் அவரது கணவருடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி பழகி வந்துள்ளார், திடீரென்று எதிர்பாராத விதமாக, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த, முதியவர் மீது பெண் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் பலத்த காயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர், மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் முதியவர் மீது பெண் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்