" மாணவிகள் நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல" - தனி பதிவேடு பின்பற்றும் தலைமை ஆசிரியர்.. கடும் கோபத்தில் பெற்றோர்!

வெளியில் யாரிடமாவது கூறினால் உங்களுக்கு இந்த பள்ளியில் இடம் கிடையாது, "அடுத்த நிமிஷமே "டீசி" கிழிச்சி வீட்டுக்கு அனுப்பிடுவேன்" என மிரட்டல்.
koyampalli high school bathroom issue
koyampalli high school bathroom issueAdmin
Published on
Updated on
1 min read

கரூர் மாவட்டம் தாந்தோணி அடுத்துள்ள, கோயம்பள்ளி என்ற ஊரில், இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில். இங்கு "செந்தில்வடிவு" என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கட்டுப்பாடு என்ற பெயரில் அவர் செய்து வரும் கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் பெரும் கஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர், அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள்.

அப்பள்ளியில் உள்ள கழிவறைக்கு செல்லும் மாணவிகள் காலணிகள் வெளியே விட்டு தான் செல்ல வேண்டும்,அணிந்துக்கொண்டு செல்லக்கூடாது. மீறினால் கழிவறையை அந்த மாணவிகளே சுத்தம் செய்ய வேண்டும். என்ற கட்டளையை விதித்துள்ளார் தலைமை ஆசிரியர் செந்தில் வடிவு.

மேலும், கழிவறைக்கு செல்லும் மாணவிகளுக்கு என்று ஒரு தனி பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதில் கையெழுத்திட்ட பின்னரே மாணவிகள் கழிவறைக்கு செல்லவேண்டும். எத்தனை மணிக்கு உள்ளே செல்கிறார்கள்? எத்தனை மணிக்கு வெளியேறுகிறார்கள் என்பதையும் பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் என்ற விதிமுறையும் பின்பற்ற வேண்டும் என சொல்லி இருக்கிறார்

இதை குறித்து வெளியில், யாரிடமாவது கூறினால் உங்களுக்கு இந்த பள்ளியில் இடம் கிடையாது, "அடுத்த நிமிஷமே "டீசி" கிழிச்சி வீட்டுக்கு அனுப்பிடுவேன்" எனவும் மிரட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன மாணவிகள், பள்ளியில் இது போன்ற கட்டாயங்கள் இருக்கிறது அதனால் எங்களால் கழிவறைக்கு கூட செல்ல முடிவதில்லை, என தங்கள் பெற்றோரிடம் கூற பதறிப்போனா பெற்றோர்கள்.

மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் பள்ளியில் நடப்பதை குறித்து புகார் மனு அனுப்பிய நிலையில், இது குறித்து விசாரிக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மனுவை அனுப்பியுள்ளனர்.

ஆனால் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த வாரம் ஓய்வு பெற்ற நிலையில் பெற்றோரின் புகார் மனு குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,இந்நிலையில் தலைமை ஆசிரியரின் கொடுமைக்கு ஒரு தீர்வு கிடைக்குமா? என ஏங்கியிருக்கின்றனர் மாணவிகளும், அவர்களது பெற்றோரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com