kumari ananthan death news 
தமிழ்நாடு

"அப்பா என்ன விட்டுட்டு போய்ட்டீங்களே" - கால்களைப் பிடித்து கதறி அழுத தமிழிசை.. கடைசி வரை நேர்மையாக இருந்த "சொக்கத் தங்கம்"

பாராளுமன்றத்தில் தமிழ் மொழியை பயன்படுத்தும், உரிமையையும் தமிழில் கேள்வி கேட்ட்கும் அதிகாரத்தையும் பெற்று தந்தவர், குமரி அனந்தன்

Mahalakshmi Somasundaram

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறந்த இலக்கியவாதியுமான "குமரி அனந்தன்" இன்று(ஏப்ரல் 9) காலமானார், குடியாத்தம் அத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஒரு வாரமாக சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

இவரது மகள், தமிழிசை வேறு கட்சியில் இருந்தாலும், அப்பாவின் பிரிவை ஏற்றக்கொள்ள முடியாமல், அவர் காலை பிடித்து கதறி அழும் கட்சி இவர்களுக்கு இடையே உள்ள, அப்பா மகள் பாசத்தை வெளிகாட்டும் விதமாக அமைந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு தகைசால் விருது பெற்ற இவர், காங்கிரஸ் கட்சியில் காமராஜருடன் இணைத்து பண்ணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது,நாகர்கோவில் தொகுதியில் ஒரு முறை "எம்பி" யாகவும், ஐந்து முறை "எம் ஏல் ஏ"- வாகவும் பதவி வகித்தவர்.

பாராளுமன்றத்தில் தமிழ் மொழியை பயன்படுத்தும், உரிமையையும் தமிழில் கேள்வி கேட்கும் அதிகாரத்தையும் பெற்று தந்தவர், குமரி அனந்தன் அவர் எனவே இவரை தனி ஆளாக நின்று தமிழுக்கு பெருமை சேர்த்தவர் என்று கலைஞர் எப்போதும் பாராட்டுவார்.

இவருக்கு தமிழ் மீது இருந்த அதீத பற்றினாள், நீங்களும் பேச்சாளராகலாம், செம்பணை நாடு, பாரதியார் பாடிய பாரதி, கலித்தொகை இன்பம், நல்லாட்சி தந்த காமராஜர் போன்ற பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்,தமிழ் இலக்கிய உலகில் "இலக்கியச் செல்வர்" என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர். மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தனது பயணத்தை தொடங்கிய குமரி அனந்தன், பின்னாளில் சில கருத்து வேறுபாடுகளால் 1980-ல் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற தனி கட்சியை தொடங்கினார்.1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இக்கட்சியின் மூலம் வெற்றியும் பெற்றார், மீண்டும் தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்ட இவர், 1996,1989 மற்றும் 1991ல் நடைப்பெற்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடினார்.

பனை மரத்தை பாதுகாக்க வேண்டும்,நதிகளை இணைக்க வேண்டும் என்ற மக்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அதற்காக பாதை யாத்திரை மேற்கொண்டவர், தமிழர்களுக்காகவும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்காகவும், இறுதிவரை போராடிய ஒரு முத்த தலைவர் "குமரிஅனந்தன்" என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், மேலும் இவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும், என்ற அறிவிப்பை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவரது உடல் பொது மக்கள், மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக, அவருடைய மகள் தமிழிசையின், சாலிகிராம வீட்டில், வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்