வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.
அதிலும் குறிப்பாக கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. மேலும் இதிலிருந்து மீள பாஜக தலைமையை விஜய் நாடியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், பாஜக -வின் ‘வேறொரு முகம்’ தான் விஜய், என திமுக கூட்டணியில் இருக்கும் விசிக சொல்லி வருகிறது. அதற்கு காரணம் என்னதான் பாசிச பாஜக என விஜய் விமர்சித்தாலும், பாஜக -வினர் மிக கடுமையான விமர்சனங்களை விஜய்க்கு எதிராக முன்வைத்தது இல்லை. ஆனால் பல இடங்களில் விஜய் -யை கலாய்த்து வந்த சீமான், கரூர் சம்பவத்தில் மிகவும் பக்குவமாக கையாண்டார்.
ஆனால் சொந்த வயேதான் சூனியம் என்பதை போல, விஜய் வெளியிட்ட வீடியோ அவருக்கே எதிராக அமைந்துவிட்டது. அதிலிருந்து பலரும் விஜயை மிக காட்டமாக விமர்சிக்க துவங்கினர். இந்த சூழலில் கரூர் சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் உள்ளது, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிபிஐ விசாரணை என்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாநில உரிமைக்கு மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை?. சிபிஐ விசாரணை என்றால் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா? எல்லாமே மாநில உரிமை என்று பேசுகிறீர்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூன்று மூளையா உள்ளது?.
தமிழக காவல்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது சிபிஐ மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது . சிபிஐ, வருமான வரித்துறை அமலாக்கத்துறை போன்றவை எல்லாம் தனித்து செயல்படும் என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம் ஆனால் ஆட்சியாளர்களின் ஐந்து விரல்கள் போல, ஆதிகார வர்க்கம் சொல்லுவதை கேட்டுத்தான் அவர்கள் செயல்படுவார்கள்.
சிபிஐ விசாரணையில் என்ன வந்துவிடும் இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். அப்படி என்றால் அஜித் குமார் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கூறியது தமிழக அரசு தானே என்ற கேள்விக்கு, அரசு தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறது. சிபிஐ விசாரணை என்பது காலத்தை கடத்தும், வழக்கை திசை திருப்பிவிடும்.
நாளையிலிருந்து சிபிஐ விசாரணை தொடங்கி விடுமா? என்ற கேள்விக்கு சிபிஐயின் புலன் விசாரணை நன்றாகவே இருக்காது. கேப்டன் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படம்கூட சுவாரசியமாக இருக்கும். தனிநபர் நீதிபதி தலைமையில் விசாரணை என்பதெல்லாம், திசை திருப்பி விடுவது தான்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசை கைகாட்டுகிறது திமுக அரசு. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். எதற்கெடுத்தாலும் மாநில சுய ஆட்சி பேசும் திமுக அரசு எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை கை காட்டுகிறது. இது ஒரு தேசிய இன அவமதிப்பு, மாநில அவமதிப்பு, காவல்துறையை அவமதிப்பதாக பார்க்கிறேன். நேர்மையானவனுக்கு என்ன பயம் யார் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் தானே?.கிட்னி திருட்டு வழக்கில் கிட்னி திருட்டு என்று சொல்ல வேண்டாம் கிட்னி முறைகேடு என்று சொல்லுங்கள் என்கிறார்கள். மது குடிப்பவர்களை மது பிரியர்கள் என்று சொல்ல வேண்டுமாம். அப்படி என்றால் லஞ்சம் வாங்குபவர்களை ஊழல்வாதிகளை பணப் பயனாளிகள் என்று சொல்ல வேண்டியது தானே.இவர்களை ஒழிக்க வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவர் முறைத்ததால் இரண்டு தட்டு தட்டினார்கள் என திருமாவளவன் விளக்கம் அளித்தது குறித்த கேள்விக்கு, “அவரது கருத்துக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. எங்கள் அண்ணனை நீங்கள் முறைத்தாலும் நானே உங்களை அடிப்பேன்.
அடித்தது சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்கள் நினைத்தது போல் கருத்து சொல்ல முடியாது கருத்து சொன்னால் குடும்ப சண்டையாக மாறிவிடும். தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தை பார்க்கும் பொழுது இது மக்களுக்கான அதிகாரம் இல்லை முதலாளிகளுக்கான அதிகாரம் என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறார்கள்.
அதை எதிர்த்து கிளர்ச்சிக்கு வர வேண்டும். ஒரு துப்புரவு பணியாளர்களை கூட அரசால் தன்னகத்தே வைத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு முதலாளி உள்ளே வரும் பொழுது அவனுக்கு லாப நோக்கம் தான் இருக்கும் சேவை நோக்கம் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆந்திரா ஸ்வீடன் போன்ற பகுதியை சார்ந்த முதலாளிகள் தமிழ்நாட்டை வந்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அவசியமில்லை.
ஒரு கிலோ குப்பையை அள்ளுவதற்கு 12 ரூபாய் கட்டணம் போடுகிறார்கள். மாநகராட்சி கழிவறையை சுத்தம் செய்ய 350 ரூபாய் கட்டணம் போடுகிறார்கள். தனியாரிடம் ஒப்படைத்தால் தான் இதை வசூலிக்க முடியும் அரசிடம் இருந்தால் இதை செய்ய முடியாது. எல்லா துறைகளிலும் பல லட்சம் கோடி கடன் உள்ளது இது துயரம் தான். கரூர் விவகாரத்தில் த வெ க அரசியல் செய்கிறது அதற்கு பாஜக அதிமுக துணை நிற்கிறது என்று ஆர் எஸ் பாரதி அறிக்கை தொடர்பான கேள்விக்கு, கடந்த காலங்களில் திமுக என்ன செய்ததோ அதை தான் இவர்கள் செய்கிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்து போய் இறந்தது. அதேபோல் இது தியாகியை பார்க்க சென்றோ சுதந்திர போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கோ சென்று உயிரிழந்தவர்கள் இல்லை. ஒரு நடிகனை பார்க்க போய் உயிரிழந்திருக்கிறார்கள். இது விபத்து
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மக்களின் கிளர்ச்சி புரட்சியால் ஏற்பட்ட படுகொலை சம்பவம் அது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு திமுக அரசு செய்தது பணி உயர்வு, பணியிட மாற்றம் அளித்ததுதான். எதிர்க்கட்சிகளாக இருக்கும் பொழுது புனிதர்களாக மாறிவிடுவார்கள். அதிகாரங்களின் பிழை அதிகாரங்களின் தவறு. விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள் தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள். எதையாவது செய்து விஜய்யை பாஜக, அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும் அந்த கூட்டணிக்கு அவர் சென்று விடக்கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்பட்டு வருகிறார்கள் இதுதான் 10 நாட்களாக நடக்கிறது” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.