“விஜய் கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால் தான்… அவர் ஒரு அரசியல் நடிகர்” -விசிக எம்.பி.கடும் தாக்கு!!

திமுகவுக்குச் செல்லும் சுமார் 14% மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு ....
tvk vs vck
tvk vs vck
Published on
Updated on
1 min read

வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

அதிலும் குறிப்பாக கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. மேலும் இதிலிருந்து மீள பாஜக தலைமையை விஜய் நாடியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், பாஜக -வின் ‘வேறொரு முகம்’ தான் விஜய், என திமுக கூட்டணியில் இருக்கும் விசிக சொல்லி வருகிறது. அதற்கு காரணம் என்னதான் பாசிச பாஜக என விஜய் விமர்சித்தாலும், பாஜக -வினர் மிக கடுமையான விமர்சனங்களை விஜய்க்கு எதிராக முன்வைத்தது இல்லை. 

இந்தநிலையில்தான் விஜய் பாஜக -வின் சொற்படியே நடக்கும் நபர். கட்சி ஆரம்பித்ததே பாஜக -விற்காகத்தான் என, விசிக எம்.பி. ரவிக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கருத்து, “விஜய் தரப்பின் மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து,  பாஜகவின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம். திமுகவுக்குச் செல்லும் சுமார் 14% மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய். 

பாஜகவை கொள்கை எதிரி என்பதும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பதுபோன்றத் தோற்றத்தை ஏற்படுத்துவதும் ( இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள். 

பாஜக அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அதிமுக வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பாஜக- விஜய் நோக்கமும் தோற்றுவிடும். 

எனவே, பாஜக அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பாஜக திட்டமிடும் எனக் கருதுகிறேன். பாஜகவினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com