தமிழ் சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நபராக விளங்கிய ஏ.வி.எம் சரவணன் இன்று (டிசம்பர் 4, 2025) வயது மூப்பு காரணமாக தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார். நேற்று தனது பிறந்தநாளைக்கொண்டாடிய நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்த செய்தி திரையுலகம் முழுவதிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம், தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான நிறுவனம் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா எனப் பல தலைமுறை நடிகர்களின் படங்களை தயாரித்த முக்கியமான நிறுவனத்தை நிர்வகித்த ஏவிஎம் சரவணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில், இன்று காலை காலமானார். இவரின் மறைவுக்கு திரைபிரபலன்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தித் வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.