தமிழ்நாடு

பால்பேக்கட்டில் மிதந்த ஈ; பொதுமக்கள் அதிர்ச்சி!

மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பாலில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.

Malaimurasu Seithigal TV

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில், ஒரு நுகர்வோர் வாங்கிய ஆவின் பால் பேக்கட்டில், இறந்த நிலையில், ‘ஈ’ மிதந்தது. அதனைப் பார்த்து பயந்து போன, அவர், அதனை வீடியோ எடுத்த நிலையில், அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காமராஜர் பல்கலிக்கு அருகில் உள்ள ஆவின் பாலகத்திலேயே விற்ற பாலில் ‘ஈ’ இருந்ததால் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டது. பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு நாளைக்கு ஐந்து லட்சத்திற்கும் மேலான பால் பேக்கட்டுகள் விநியோகம் செய்யப்படும் நிலையில், மதுரையில் நடந்த இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.