ஆவின் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய டிசம்பர் 3 இயக்கம்!

ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் அலைக்கழிக்கும் ஆவின் நிறுவனத்தை கண்டித்து நந்தனம் தலைமையகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

ஆவின் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய டிசம்பர் 3 இயக்கம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஆவின் பார்லர் வைக்கும் உரிமம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற அரசாணை இருக்கிறது. ஆனால், ஆவின் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பங்களைக் கொடுக்க அலைக்கழிப்பதாகவும் ஆவின் நிர்வாக அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் லஞ்சம் கேட்பதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளை பலமுறை வரவழைத்து அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தை டிசம்பர் 3 அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பலாப்பழ ஐஸ்கிரீம், கோல்ட் காபி எல்லாம் ஓகே... விலை தான்?

சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளுக்குப் பரிசளிக்கும் வகையில், பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | என்னது...’கோல்டு காபி’ முதல்...’பலாப்பழ ஐஸ்கிரீம்’ வரையா...! மக்களுக்கு ஐஸ் வைக்கும் ஆவின்!!

ஆவின் பால் நுழைவாயில் ஆவின் நிர்வாக இயக்குனர்களுடன் மற்றும் அதிகாரியுடன்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக இவர்களை வரவழைத்து நாள்திரம் சுற்ற விடுவதால் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல மாட்டோம் உணவு அருந்த மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சரின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடியோ காலிங் மூலம் டிசம்பர் 3 இயக்கம் தலைவர் தீபக் பேசிய பின் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அவர்கள்  பொத்தி வைப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஆவின் பால்!