திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கிராமத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன்(35) என்ற இவர்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துஅருளி (33) என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை, கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்துள்ளார். 8 வருடமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் வீட்டின் எதிர்ப்பை மீறி 2017 ஆம் ஆண்டு கோவிலில் வைத்து திருமணம் செய்து, முறையாக திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து திருநெல்வேலியில் பேட்டை என்னும் பகுதியில், இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் முத்து அருளியின் கணவர் சிவசுப்பிரமணியனின் குடும்பத்தினர்.முத்து அருளியின் குடும்பத்தில் இருந்து பணம் மற்றும் நகைகள் வாங்கி தர சொல்லி தொடர்ந்து இடையூறு செய்துள்ளனர்.
அப்போது “பணத்திற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்னால் பணம் பெற்றுத்தர முடியாது” என சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியனின் குடும்பத்தினர், வேறு ஜாதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்து அருளியை திருமணம் செய்துள்ளதால், கௌரவ பிரச்சனையாக உள்ளது.
அதனால் முத்துஅருளியை விட்டு வேறொரு பெண்ணை, திருமணம் செய்ய வேண்டும். என, தொடர்ச்சியாக சிவசுப்ரமணியனுக்கு அவரது பெற்றோர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் தம்பதியினர் நாள்தோறும் அச்சத்தோடு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக தம்பதியினர், பாதுகாப்பு தர கோரி காவல் நிலையத்தில் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதனிடையே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த போது, பார்க்க வந்த சிவ சுப்பிரமணியனின் குடும்பத்தினர், குழந்தையின் வாயில் நெற்களை போட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்கள் மூலமாக தனக்கு கொலை மிரட்டல் வந்ததால் அச்சமடைந்து. சிவசுப்ரமணியம் மற்றும் முத்து அருளி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு குடியேறியுள்ளனர்.
இந்த நிலையில் சிவசுப்பிரமணியனை தொடர்பு கொண்ட அவரது குடும்பத்தினர் கொலை செய்வதாக கூறி மிரட்டி வருவதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, காவல் நிலையத்தில் புகார் அளித்த போது காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய காவல் அதிகாரி, சிவசுப்பிரமணியனின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும். தங்களிடம் விசாரணை நடத்தாமல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. என புகாரை முடித்துவிட்டனர்.
மீண்டும் இது குறித்து புகாரளித்த நிலையில், நாங்கள் குற்றம்சாட்ட கூடிய காவல்துறை அதிகாரியே விசாரணை அதிகாரியாக இருப்பதால், எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. எங்கள் குழந்தையை கூட பார்க்க முடியாமல் தவித்து வருகிறோம். எனவே தனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது தவழும் மாற்றுத்திறனாளி மனைவியான முத்து அருளியை, கையில் சுமந்தபடி வந்து கணவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்