திருவிழாவிற்கு சென்ற மாணவன்.. கஞ்சா போதையில் நடந்த கத்திக்குத்து!

ஆத்திரம் அடைந்த சங்கர் தனது கையில் வைத்திருந்த கூர்மையான கம்பியை கொண்டு மாணவர்
chanthuru and vishnu
chanthuru and vishnu
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரம் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கண்ணன். இவருக்கு 17 வயதில் விஷ்ணு பரத் என்ற மகன் இருக்கிறார். விஷ்ணு பரத் கன்னியாகுமரி அருகே உள்ள அமிர்த வித்யாலயம் என்ற தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தேர்வுகள் எழுதி முடித்து 12ஆம்  வகுப்பிற்கு செல்ல இருந்தார்.

இந்நிலையில்  விஷ்ணு பரத் நேற்று இரவு, மாதவபுரம்  ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுவாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் சந்துரு(21) என்பவர் கஞ்சா போதையில்,  மாணவர் விஷ்ணு பரத் இடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். 

மேலும் மிகுந்த ஆத்திரம் அடைந்த சங்கர் தனது கையில் வைத்திருந்த கூர்மையான  கம்பியை கொண்டு  மாணவர், விஷ்ணுபரத்தை  குத்தியுள்ளார்.  இதனால் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில்  விஷ்ணு பரத் இறந்துவிட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டு, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் சந்துருவை கூடங்குளத்தில் வைத்து கைது செய்த போலீசார், பள்ளி மாணவர் விஷ்ணுவை கொலை செய்ததை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்  கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com