தமிழ்நாடு

“உன் சாவு என் கையில்தான்” - வேலை இடத்தில் நெருங்கி பழகிய காவலர்கள்.. வெளிவந்த ஆடியோவால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட உயர் அதிகாரிகள்!

செல்வகுமார் திருச்செந்துாருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இடமாற்றம் செய்யபப்பட்டனர்

Mahalakshmi Somasundaram

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தவர் 36 வயதான செல்வகுமார். அதே பிரிவில் 32 வயதான இந்திரா காந்தி என்பவர் காவலராக வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் தேதி நடுரோட்டில் வைத்து செல்வா மற்றும் இந்திரா காந்தி சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்த பிரச்சனை வெளியே தெரிந்ததாலல் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் திருச்செந்துாருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இடமாற்றம் செய்யபப்பட்டனர். இதற்கிடையே, இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார் “நேத்தே உன் கதை முடிஞ்சி இருக்கும் , நூலிழையில் தப்பிச்சிட்ட , இன்னொரு முறையும் இதே மாதிரி நடக்கும்னு எதிர் பார்க்காத பின்னாடி ஒருத்தன் வந்து வெட்டுவான் நான் உன் தலையிலே வெட்டுவேன்.

உன் புருஷன் கிட்ட சொல்லி உன் மகனை பத்திரமாக பாத்துக்க சொல்லு எப்ப நான் எப்படி இருப்பேன் தெரியாது, உன் சாவு எப்பவா இருந்தாலும் அது என் கையில தான்” என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இந்திரா காந்தி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹாசிமணி உத்தரவிட்டுள்ளார்.

அதே போல, காவல்துறை நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக பெண் காவலர் இந்திரா காந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். காவலர் இந்திரா காந்தி வெளியூரில் இருப்பதாக கூறியதால் கோவில்பட்டி கிழக்கு போலீசார் அவரது வீட்டில் சஸ்பெண்ட் உத்தரவை ஒட்டினர். போக்குவரத்து காவலர் பெண் காவலரிடம் பேசிய போன் கால் ரெக்கார்ட் வெளியாக தற்போது மக்களிடையே வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.