
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் பேட்டை ஆனைகட்டி கணபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் கார்த்திக் எதிர் வீட்டில் தனது தாய் மற்றும் தந்தையுடன் வாழ்ந்து வருபவர் 20 வயதான சேஷாந்த். இந்த தெருவானது சற்று குறுகலாக உள்ள நிலையில் கார்த்திக் மற்றும் சேஷாந்த் இடையே கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து இருவரையும் விலகி விட்டுள்ளனர்.
பின்னர் தொடர்ந்து கார்த்திக் மற்றும் சேஷாந்த் இடையே இருசக்கர வாகனத்தை மையமாக வைத்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று மின்சார தடை ஏற்பட்டதால் கார்த்திக் தனது குடும்பத்துடன் தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். கார்த்திக்கின் தாய் மட்டும் வீட்டில் சில வேலைகள் இருந்ததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது மீண்டும் சேஷாந்த் கஞ்சா போதையில் கார்த்தி என்பவரின் வீட்டிற்கு சென்று கார்த்திக்கை தேடியுள்ளார். அங்கு அவர் இல்லாத நிலையில் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் டிவி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளர். மேலும் கையில் கத்தியை வைத்து கொண்டு வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாலையில் சத்தமிட்டு தேவையில்லாமல் இடையூறு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்த குடியாத்தம் நகர போலீசார் அரைகுறை ஆடையில் கஞ்சா போதையில் ரகளை ஈடுபட்டு இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் அரைகுறை ஆடையில் கஞ்சா போதையில் ரகளை ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் இளைஞர் ரகளை ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.