தமிழ்நாடு

மன்னிப்பு கேட்காமல் ‘மன்னிப்பு’ கேட்ட மாரிதாஸ்! வக்கீல் நோட்டீஸால் வலுக்கும் ஆடியோ சர்ச்சை.. பேசியது ஆ ராசாவா?

"ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும்.”

மாலை முரசு செய்தி குழு

திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா வின் ஒரு ஆடியோ வை வெளியிட்டு திமுகவில் ஒரு அதிர்ச்சி வலையை  உருவாக்கினார் வலைதள விமர்சகர் மாரிதாஸ். தற்போது இந்த செயல் சட்ட ரீதியான மோதலாக உருவெடுத்துள்ளது. 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனவர் ஆ ராசா.
சமீபத்தில் மாரிதாஸ் தனது 'X' பக்கத்தில் ஆ.ராசா பேசுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டார். அதில் 2G ஊழல் வழக்கு, கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது, முதலமைச்சர் ஸ்டாலின் தகுதி மற்றும் திமுக நிர்வாகிகள் குறித்தும்  ஆ.ராசா விமர்சிப்பது போன்ற உரையாடல்கள் இடம் பெற்றிருந்தது.

அதில் 2G ஊழல் வழக்கில் ஆ.ராசா கைதாகி சிறையில் உள்ள போது திமுக நிர்வாகிகள் யாரும் அவரை பார்க்க வரவில்லையனென்றும், இரண்டு மாதங்களுக்கு பின் கைதாகி சிறைக்கு வந்த கனிமொழிக்கு எல்லோரும் வந்ததாகவும் குறிப்பிட்டிக்கிறார். மேலும் கலைஞர் டிவி க்கு பணம் கைமாறியதாகவும் தெரிவித்திருக்கிறார். அதை தொடர்ந்து “ தலைவர், துரை முருகனை அனுப்பி வைத்தாரா? எனவும் கேட்டுள்ளார். அழகிரி குறித்தும் சர்ச்சைக்குரியவாறு  பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோவை வெளியிட்ட மரித்தாஸ் “ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும்.” எனவும் X தளத்தில் பதிவு செய்திருந்தார். இது திமுகவினரிடையேவும்  சமூக வலைத்தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆடியோவை வெளியிட்டர்  மாரிதாஸ். அதிலும்  ஆ ராசா ஸ்டாலின் குறித்தும் திமுக முக்கிய நிர்வாகிகள் குறித்தும் சர்ச்சைகுரிய கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். மேலும் சாதி அரசியல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 

அதனையடுத்து  மாரிதாஸ் ‘ இது ஆ ராசா குரலே இல்லை - AI பயன்படுத்தி மாரிதாஸ் போட்டுருக்கான் - அப்படினு உருட்டிட்டு இருக்கும் உபிஸ் : உங்கள் கட்சியை அப்போ என் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்ய சொல்லி நீதிமன்றம் வேண்டுமென்றால் போங்களேன். என்ன திராணி இருக்கா? எதுக்கும் முன்னாடி உங்கள் இளவரசர் உதயநிதி மான நஷ்ட வழக்கு என் மீது போட சொல்லி நீதிமன்றம் போனார் - அதில் என்ன ஆனது என கேட்டுவிட்டு பின் நீதிமன்றம் போகவும் இல்லை இப்பிடிக்கா AI மிமிக்ரி ஆர்டிஸ்ட் என உருட்டலாமா என யோசிக்கவும். வெளியான ஆடியோ ஆ ராசா உடையது தான். என்றும் பதிவிட்டுள்ளார்.

தற்போது ஆ ராசா அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், எனக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு ஆடியோவை நீக்குமாறும், அதற்கு மன்னிப்பு கேட்குமாறும்” வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அப்படி நீக்க வில்லை என்றால் மாரிதாஸ் மீது அவதூறு பரப்பு, மற்றும் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் "அந்த ஆடியோ ஆங்கங்கே துண்டித்து எடிட் செய்யப்பட்டுள்ளது" எனவும் தெரிவித்துள்ளார். ராசா அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸை பகிரங்கமாக மறுத்துள்ளார் மாரிதாஸ். மேலும் “யூடுபர் மாரிதாஸ்  திமுக ஆ ராசா அவர்களுக்கு Sorry மன்னிப்புக்கு கேட்க முடியாது” :…எனவும் பதிவிட்டுள்ளார். "அவர் ஆ ராசா மன்னிப்பு கேட்க கூறினார்.. நான் மாரிதாஸ் மன்னிப்பு கேட்க முடியாது. எந்த நீதிமன்றமும் வர தயார் என கூறுகிறேன்" அதையும் சேர்த்து செய்தியா போடுங்கள் எனவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த இரண்டு ஆடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் பிரசாரத்தின் போது இந்த ஆடியோ உரையாடலை குறிப்பிட்டு திமுக வை விமர்சித்துள்ளார்.  அந்த ஆடியோ தனது இல்லை என்று ஆ ராசா எங்கும் குறிப்பிடவில்லை. இது பலரிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.