தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது" - எடப்பாடி பழனிச்சாமி

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் மருத்துவத்துறை தொடர்ந்து சீரழிந்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காய்ச்சல்  காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  3 வயது குழந்தைக்கு நோயின் தன்மையை பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்திருப்பதற்கு  கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தனது துறையில் கவனம் செலுத்தாமல் விளையாட்டு பயிற்சியாளராக வலம் வருகிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மேலும்,  மா.சுப்ரமணியன் மக்கள் நலன் காக்கும் மந்திரியா ? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என சந்தேகம் வருவதாக எடப்பாடி தெரிவித்துள்ளார்.