ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏற்படும் காலமாற்றத்தால் பால் விநியோகத்தில் ஏற்பட்ட சிறு தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் விளக்கம் அளித்துள்ளார்
சட்டப்பேரவையில், பால் தட்டுப்பாடு தொடர்பாகவும், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்தும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ஜனவரி, பிப், மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்படும் காலமாற்றத்தால் பால் விநியோகத்தில் ஏற்பட்ட சிறு தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வடமாநிலங்களில் தோல் கழலை நோயினால் பல கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டதாக கூறிய அவர், அண்டை மாநிலத்தினர் தமிழ்நாடு எல்லையோர மாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிகளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் சில தட்டுப்பாடுகள் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார்.
மேலும், கொரோனா காலத்திலும் பால் கொள்முதல் செய்து நுகர்வோர்களுக்கு தடையின்றி வழங்கிய ஒரே நிறுவனம் ஆவின் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தி.மு.க. முன்னாள் எம்.பி.டாக்டர் மஸ்தான் வழக்கு... ஜாமீன் மனு இரண்டாவது முறை தள்ளுபடி!!!