Minister Rajmohan Minister Rajmohan
தமிழ்நாடு

"எங்கு நடந்தாலும் தவறு தவறுதான்" 5 ஆண்டுகள் இல்லை 50 ஆண்டுகள் ஆட்சி தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் மு.க. ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடி!

"எங்கு நடந்தாலும் தவறு தவறுதான், நமது அரசாங்கத்தை பொறுத்த வரையில் நமது முதலமைச்சர் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக சகிப்பு தன்மையற்ற நடவடிக்கை எடுக்கப்படும்"

Vinvizhi Leninton

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், "ஒரு மாதம் முடிவதற்கு முன்பாகவே காவல் துறை அதிகாரிகளின் துரித பணி காரணமாக தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டும், இது குறித்து ஆலோசனை மேற்கொண்டும் வருவதாகவும், சட்டத்தை பேணி பாதுகாக்க, அனைத்து துறை சார்ந்த நடவடிக்கையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று பேசினார். மேலும், கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்க்கு குறித்து கேட்டபோது, "எங்கு நடந்தாலும் தவறு தவறுதான், நமது அரசாங்கத்தை பொறுத்த வரையில் நமது முதலமைச்சர் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக சகிப்பு தன்மையற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

கோவை சிறுமி வழக்கில் கூட துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். இது போன்ற சம்பவங்கள் எப்போதும் நடைபெற கூடாது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படும் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இது 5 ஆண்டு காலம் நடக்கும் ஆட்சி அல்ல. சினிமா கவர்ச்சியில் அமைந்த ஆட்சி. புதிய பொம்மையை பார்த்தால் அடம்பிடிக்கும் குழந்தைக்கு அது 2 நாட்களில் போர் அடித்து விடும். பொம்மை வேண்டும் என்பது போல் நடிகரை பார்த்து சென்ற மக்கள் தாயிடம் வருவது போல் நம்மிடம் வருவர்கள்" என்று பேசினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் ராஜ்மோகனிடம் கேள்வி எழுப்பியபோது, " ஆட்சிக்கு கூட தான் வரமாட்டோம் என்றார்கள். நாங்கள் ஆட்சியமைத்து கட்டினோம். ஆனால். மக்களின் பேராதரவோடு 5 ஆண்டுகள் இல்லை 50 ஆண்டுகள் தாண்டியும் இது நீடிக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.