மீண்டும் போட்டியின்றி தேர்வு
திமுக தொடங்கி 73 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் கழகத்தின் தலைவரானார். அவரோடு பொதுக் செயலாளராக துறை முருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்மொழிய தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி மேற்கண்ட பதவிகளை அறிவித்தார். தன்னை தலைவராக அறிவித்ததையடுத்து ஆற்காடு வீராசாமிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.
மேலும் படிக்க: மீண்டும்... மீண்டுமா?? தலைவரே.. தலைவரே.. தலைவரே.. உற்சாகத்தில் உடன்பிறப்புகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தலைவர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை
தேர்தல் ஆணையர் வீராசாமியால் தலைவராக அறிவித்த பின்னர் மேடையில் அமைக்கப்பட்டிருந்த தலைவர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். மேடையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
துணைப் பொதுச்செயலாளர்களை அறிவித்த ஸ்டாலின்
தலைவராக தேர்தெடுக்கப்பட்ட பின்னர்; கழகத்தின் முதன்மை செயலாளராக திரு கே.என். நேரு அவர்களையும் மற்றும் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் கனிமொழி ஆகியோரை திமுக துணைப் பொதுச்செயலாளர்களாகவும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்.
தணிக்கை குழு உறுப்பினர்களாக திரு. முகமது சகி, திரு. கு. பிச்சாண்டி, திரு.வேலுச்சாமி, திரு. சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை பொதுச்செயலாளராக அறிவித்த பின்னர் மேடையிலிருந்த தலைவர் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கனிமொழி கருணாநிதி.
------- அறிவுமதி அன்பரசன்