tamilisai latest speech Admin
தமிழ்நாடு

தமிழிசை பேசிய பஞ்ச் டயலாக்...சூசகமாக சொன்ன மெசேஜ் இது தான்

வலுவான கூட்டணியை அமைக்குமா? யாரெல்லாம் கூட்டணியில் இடம்பெறுவார்கள்? தமிழக அரசியல் களத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

Anbarasan

சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற பாஜக.,வின் தேசிய கல்வி கொள்கை விளக்க கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பேசிய பஞ்ச் டயலாக் ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், அதில் சூசகமாக அவர் சொன்ன தகவல் தான், தமிழக அரசியல் களத்தில் உள்ள பெரிய கட்சிகளை குறிப்பாக, அதிமுக.,வை சற்று குழப்பமடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

பாஜக.,வின் விளக்க கூட்டம் :

தேசிய கல்வி கொள்கைக்கும் சரி, அதை காரணமாக வைத்து பாஜக.,விற்கும் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய பாஜக அரசிற்கு எதிராக ஒன்று சேர்ந்து நிற்கின்றன. அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்பதால் தமிழக மக்களின் மனநிலையில் அவர்கள் சொல்வது தான் சரி என்ற நிலைக்கு வந்து விட்டது. "அப்படி எல்லாம் கிடையாது...நாங்கள் சொல்வது தான் சரி. மக்களின் நலனுக்காகவும், மாணவர்களின் எதிர்கால நலனுக்காகவும் தான் தேசிய கல்வி கொள்கையில் நாங்கள் மாற்றம் கொண்டு வருகிறோம்" என்பதை நிரூபிக்க பாஜக உறுதியாக உள்ளது. இதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேசிய கல்வி கொள்கை விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும் படிக்க: இன்னும் இருபதே நாள்.. விஜய் எடுக்கப் போகும் "புது அவதாரம்".. டெல்லியில் இருந்து நள்ளிரவு 2.53 மணிக்கு வந்த கட்டளை!

பாஜக சொல்லும் மெசேஜ் :

தேசிய கல்வி கொள்கை என்பது பாஜக.,விற்கு அரசியல் ரீதியாக மட்டுமல்ல, 2026ல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி அமைவதிலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணிக்காக பாஜக., எவ்வளவோ முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் இதுவரை பாஜக கூட்டணியில் இணைய இதுவரை எந்த கட்சியும் முன்வரவில்லை. இந்த நிலையில் தஞ்சை கூட்டத்தில் தமிழிசை பேசி உள்ளது, மற்ற அரசியல் கட்சிகளுக்கு பாஜக தெரிவிக்கும் மிக முக்கியமான மெசேஜாக இது பார்க்கப்படுகிறது. விஷயம் புரிந்தவர்கள் குழப்பமடைந்துள்ளனர். புரியாதவர்கள் இது வழக்கமான அரசியல் மேடை பேச்சு தான் என கடந்து சென்றுள்ளனர்.

தமிழிசையின் பஞ்ச் :

மேலும் படிக்க: என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே வேல்முருகன்...அடுத்த கூட்டணி இவருடன் தானா?

தஞ்சை கூட்டத்தில் பேசிய தமிழிசை, " நான் என் அப்பாவின் கோட்டாவில் டாக்டர் படித்தேன் என்கிறார்கள். அப்படியானால் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி எந்த கோட்டாவில் அந்த பதவிக்கு வந்தார்? முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலின் எந்த கோட்டாவில் இந்த பதவிக்கு வந்தார்? தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ...இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ...கைகள் உயர்கிறதோ இல்லையோ...ஆனால் தாமரை மலர்ந்தே தீரும்" என்றார். தமிழத்தில் தாமரை மலரும் என தமிழிசை பேசுவது ஒன்றும் புதியத கிடையாது. பல ஆண்டுகளாக இவர் வழக்கமாக பேசும் அரசியல் பஞ்ச் தான் இது. ஆனால் சூரியன் உதிக்கிறதோ, கைகள் உயர்கிறதோ என்று திமுக மற்றும் காங்கிரசை மட்டும் குறிப்பிடாமல் இடையில் இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ என அதிமுக.,வையும் சேர்த்தே சொல்லி உள்ளார்.

தமிழிசை சூசகமாக சொன்னது இது தானா?

திமுக அரசிற்கு எதிராக நடத்தப்படும் கூட்டத்தில் அதிமுக பற்றிய தமிழிசை பேச வேண்டிய அவசியம் என்ன? பாஜக கூட்டணியில் இணைய அதிமுக இப்போது வரை விருப்பம் இல்லாமல் தான் உள்ளது. இதற்கு தான் மறைமுகமாக, " நீங்கள் கூட்டணி சேராவிட்டால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் கிடையாது. ஒருவேளை வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கூட மாநிலத்தில் வலுவான ஆட்சி அமைய மத்திய அரசாகிய எங்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை. அதனால் எப்போது இருந்தாலும் எங்களை தேடி நீங்கள் வந்து தான் ஆக வேண்டும்" என்பதை தான் தமிழிசை சூசகமாக கூறி உள்ளார். இதை மற்றொரு வகையில் பார்த்தால் அதிமுக.,வுடன் கூட்டணி கிடையாது என்பதை பாஜக மறைமுகமாக சொல்லுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:"மாட்டு சாணம்.. மனித மலம்..சாக்கடை" - மூன்றையும் சேர்த்து வீசி "சவுக்கு ஷங்கர்" வீடு சூறையாடல்! ஒரு தெருவே நாற்றத்தில் தத்தளிக்கும் கொடுமை!

என்ன செய்ய போகிறது அதிமுக?

பாஜக.,வுடன் கூட்டணி வைக்க அதிமுக.,விற்கு விருப்பம் இல்லை என்றாலும், பாஜக.,வை பகைத்து கொள்ளவும் அதிமுக விரும்பவில்லை. இதனால் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் தான் உள்ளது. இவ்வளவு பிரச்சனைகள், மோதல்கள், விமர்சனங்களுக்கு பிறகு பாஜக உடன் கூட்டணி வைத்தாலும், கண்டிப்பாக பாஜக தரப்பில் மிக வலுவான கன்டிஷன்களை போட வாய்ப்புள்ளது. பாஜக.,வின் கன்டிஷன்களுக்கு அதிமுக ஒத்துக் கொள்ளுமா ? என்ன மாதிரியான முடிவு எடுக்கும்? ஒருவேளை பாஜக கூட்டணிக்கு நோ சென்னால் பாஜக.,வின் நெருக்கடியை சமாளிக்கும் அளவிற்கு வலுவான கூட்டணியை அதிமுக அமைக்குமா? யாரெல்லாம் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவார்கள்? என்பது எல்லாம் அக்கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ள விஷயங்களாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்