vijay - dmk  
தமிழ்நாடு

“அடுத்த அடி செந்தில் பாலாஜிக்குத்தான்” இறங்கி செய்யக் காத்திருக்கும் விஜய்!? நாளைக்கு சம்பவம் உறுதி!!

திமுக அளவிற்கு அவர் யாரையும் சாடியதில்லை. முன்னதாக நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், மன்னராட்சி...

Saleth stephi graph

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாக மக்களையும் சந்தித்து வருகிறார் விஜய். 

ஆனால் அவர் கிடைக்கும்  இடங்களில் எல்லாம் பேசுவது வெறும் திமுக எதிர்ப்புதான், அவர் பாஜக, அதிமுக -ஆகிய கட்சிகளை விமர்சித்தாலும் திமுக அளவிற்கு அவர் யாரையும் சாடியதில்லை. முன்னதாக நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், மன்னராட்சி, ஊழலில் திளைத்த கட்சி என காத்திரமாக விமர்சித்திருந்தார்,

அதற்கு அடுத்து வந்த, மதுரை மாநாட்டில்stalin Uncle” கேக்குதா? என பேசி மு.க.ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த “அப்பா” இமேஜை உடைத்துவிட்டிருந்தார். இப்படி தொடர்ச்சியாக விஜய் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -விற்கு எதிரான விமர்சனங்களையே முன்னெடுத்து வருகிறார். 

அதிலும் கடந்த நாகப்பட்டினம் - திருவாரூர் பரப்புரையின்போது அவர் பேசிய கருத்துக்கள் மேலும் வைரலாகின. விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியலில் சில முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில்தான் விஜய்  - இந்த வாரம் நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை நடத்த உள்ளார். நேற்றுதான் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாமக்கல் மாவட்ட காவல் ஆணையரிடம் அனுமதி பெற்று வந்தார், 

 நாமக்கல்லை  தொடர்ந்து கரூரிலும் பரப்புரை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

கரூரில் என்ன பேசுவார் விஜய்!?

விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும்போதும் அந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசுகிறார். குறிப்பாக ஆளும் திமுக -வை அடித்து தொங்கவிடுகிறார்.

மேலும் திமுக -ஆட்சியில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள், மக்களின் ன்றாடங்களை பாதிக்கும் விஷயங்களை எடுத்து பேசுகிறார்.

மேலும் கடத்த முறை” நாகப்பட்டினத்தில் பேசும்போது, சொந்த குடும்பத்தின் வளர்ச்சியே ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. எனது சொந்த மக்களை சந்திப்பதற்கு எதனை கட்டுப்பாடுகள். அங்க பேச கூடாது, இங்க பேசக்கூடாது, நா பேசுறது 3 நிமிஷம்தான், நான் என்னதத்தான்யா பேசறது. இதாவது பரவாஇல்லைங்க ..இதத்  தாண்டி ஒரு ரூல் போட்டாங்க..பஸ் -க்குள்ளையே இருக்கணுமா… கைய ரொம்ப தூக்கக்கூடாதாம்..என்ன நான் கேட்டுட்டேன், என் மக்களை, என் குடும்பத்தை சந்திக்க போறேன்.. என்னதான் சார் உங்க எண்ணம். சரிங்க சார் அரசியல் தலைவர் அப்டிங்கிறதெல்லாம் மறந்துடுங்க, சாதாரண தமிழ்நாட்டு மண்ணோட மகனா, பலகோடி பெண்களின் சகோதரனா, என் மக்களோட சொந்தக்காரனா நான் பாக்க போனா  அப்போ என்ன பண்ணுவீங்க..? அப்போதும் தடை செய்வீர்களா?? இனிமேலும் இந்த தடையெல்லாம் போட்டிங்கன்னா, நா மக்கள்கிட்டையே அனுமதி வாங்கிடுவேன்..மக்களே நீங்கள் சொல்லுங்க..நா உங்கள பாக்க வரக்கூடாதா? பேசக்கூடாதா? உங்க குறைகள கேக்க கூடாதா?” என்றெல்லாம் எமோஷனலா பேசியுள்ளார்.

கரூரில் நிச்சயம் விஜய் -ன் வாயில் சிக்கப்போவது செந்தில் பாலாஜி தான் என்கின்றனர் அரசியல் ஆர்வலர் சிலர். சில நாட்களுக்கு முன்பு நடந்த ‘முப்பெரும் விழாவை’ செந்தில் பாலாஜிதான் ஒருங்கிணைத்திருந்தார். மிகச்சிறப்பான ஏற்பாடு,ஸ செயல் வீரர் செந்தில் பாலாஜி என்றெல்லாம் முதல்வரால் புகழப்பட்டிருந்தார். 

இதை வைத்துதான் விஜய் பேச உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஏற்கனவே திமுக நிகழ்வுகள் அனைத்தும் சனிக்கிழமையை தவிர்த்து வேறு வேறு நாட்களில் நடக்கின்றன. திமுக -இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  2026 சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழகம் அல்லோலப்படும் என்பது உறுதி.. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.