ஏய்.. இந்தாம்மா.. "விஜய்யை பார்க்க முண்டியிட்டு அப்படியே சரிந்த பெண்! நாகையில் கட்டுப்படுத்த முடியாத கூட்டம்!
நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் இரண்டாவது அரசியல் பயணத்தை நாகப்பட்டினத்தில் சற்றுமுன் தொடங்கியுள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில், விஜய்யைப் பார்ப்பதற்காக மக்கள் அலைகடலெனத் திரண்டதால் நாகப்பட்டினம் நகரமே திணறிப்போனது. இருப்பினும், இந்த மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு நடுவே, விஜய்யை நெருக்கமாகப் பார்க்க ஆவலுடன் முண்டியடித்த ஒரு பெண், கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்துள்ளார்.
விஜய் தனது முதல் பயணத்தை திருச்சியில் தொடங்கி, இப்போது இரண்டாவது பயணத்தை காவிரி டெல்டா பகுதிக்கு விரிவுபடுத்தியுள்ளார். நாகப்பட்டினத்தில் அவர் உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி, லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறிப்போனார்கள். விஜய்யின் வருகை, கோஷங்கள், பேச்சுகள் என அந்தப் பகுதி முழுதும் உற்சாகமும் ஆரவாரமும் நிறைந்திருந்தது.
விஜய்யின் பேச்சைக் கேட்கவும், ஒரு முறையாவது அவரை நேரடியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலும் மக்களிடம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, பெண்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டம் மிகப்பெரிய அளவில் காணப்பட்டது. இது, கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் விஜய் பெற்றிருக்கும் மக்கள் ஆதரவின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
விஜய் பேருந்தின் மீது ஏற தயாராகிக் கொண்டிருந்த போது, அதீத உற்சாகத்தின் காரணமாக, மக்கள் முன்னால் செல்வதற்காக முண்டியடிக்கத் தொடங்கினர். அப்போது, விஜய்யை நேரில் காண வேண்டுமென்ற ஆர்வத்தில் கூட்டத்திற்குள் புகுந்துசென்ற ஒரு பெண், கடும் நெரிசலில் மூச்சுத் திணறி அப்படியே சரிந்து விழுந்தார்.
அருகில் இருந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இதைப் பார்த்து உடனடியாகச் செயல்பட்டனர். கூட்ட நெரிசலால் அவதிப்பட்ட அந்தப் பெண்ணை அவர்கள் பத்திரமாக மீட்டு, உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் வண்டிக்குக் கொண்டு சென்றனர். உடனடியாக அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.