modi with nithish  
தமிழ்நாடு

“நிதிஷ் சி.எம் தான், ஆனா ஆட்சி எங்களோடது” - பீகார் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை அள்ளியது பாஜக!!

மாநிலத்தின் காவல்துறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முக்கிய...

மாலை முரசு செய்தி குழு

234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் 202 இடங்களில் வெற்றிபெற்று பெரும் சாதனையை படைத்தது. மேலும் பாஜக பீகாரில் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் படுதோல்வி!

50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதவகையில் காங்கிரஸ் அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. வெறும் 5 இடங்களை மட்டுமே காங்கிரஸ் தனது கையில் வைத்திருக்கிறது. இது கட்சி ரீதியாகவே மிகப்பெரும் பின்னடைவாகும். 

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியோர் இணைந்து ‘மஹா கட்பந்’ கூட்டணி உருவானது. ஆனால் இந்த கூட்டணி இந்த 2025 தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெரும் என கூறப்பட்டது. ஆனால் கள நிலவரம் அனைத்தையும் மாற்றி எழுதியுள்ளது.

கடந்த ஓராண்டாகவே பீகாரின்மீது நலத்திட்டங்கள் மழை போல பொழிந்தன, ஆனால் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் NDA கூட்டணி பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியது பெரும் பேசுபொருளானது. ஆனால் அந்த ரூ.10,000 தான் இன்று NDA கூட்டணியின் வெற்றியை சாத்தியமாகியுள்ளது. 

ஆனால் ‘மஹா கட்பந்தன்’ கூட்டணியின் தோல்விக்கு, கூட்டணியில் நிலவிய சில சிக்கல்களும் காரணம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதில், “இந்த தேர்தல் பாஜக ஒரு கட்சியை எப்படி அணுகுகிறது என்பதற்கான ஒரு உதாரணம் . SIR - மீது மிகப்பெரும் விமர்சனங்கள் இருந்தாலும், அதுவே முழு காரணம் என்று சொல்லிவிட முடியாது. லோக் ஜன் சக்தி கட்சியின் ஷிராக் பஸ்வானை உள்ளே கொண்டு வந்தது மிக முக்கியமான ஒரு நகர்வு .

முக்கிய இலாக்காக்களில் பாஜக!

பாஜக -வின் புதிய முதல்வராக ஜேடியு -ன் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் தான் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் நேற்றைய தினம் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாநிலத்தின் காவல்துறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முக்கிய இலாக்காவான மத்திய உள்துறை அமைச்சர் பதவி பாஜக -வின் சாம்ராட் சவுத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த உள்துறை நிதிஷ் குமார்வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பீகார் சட்டசபை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராகவும், துணை முதல்வராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பாஜகவின் விஜய் குமார் சின்ஹாவிற்கும்.பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் திலிப் ஜெய்ஸ்வாலுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது.  பாஜகவின் மங்கல் பாண்டேவிற்கு சுகாதாரத்துறை வழங்கப்பட்டுள்ளது.

என்டிஏ கூட்டணி வெற்றி என்பது ஒரு கூட்டு வெற்றிதான் என்றாலும், மாநிலத்தின் போலீஸ் அமைச்சராக முதல்வரே இருப்பார். ஆனால் இந்த முறை, உள்துறை அமைச்சர் பதவி பாஜக -விடம் சென்றிருப்பது ‘நிதிஷ் குமார் முதல்வராகவே’ இருந்தாலும் நாங்களே ஆட்சியாளர்கள் எனும் போக்கை காட்டுவதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில் என்டிஏ கூட்டணி ஆதரவாளர்கள் கூறுகையில், “கூட்டணி ஆட்சி  என்ற வகையில் என்டிஏ கூட்டணி சுமூகமாக இலாகாக்களை பிரித்துக் கொண்டுள்ளது” என கூறி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.