

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025ன் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி, NDA கூட்டணி 200 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 96 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையான கட்சியாக மாறியுள்ளது. மேலும் பீகார் அரசியல் களத்தில் MGB கூட்டணி வெறும் 47 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. எனினும், களத்தில் பணம் சார்ந்த வாக்குறுதிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதற்கான ஒரு தெளிவான பாடத்தை இந்த தேர்தல் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகக் குறைவான தொகையைக் கொண்ட ஒரு திட்டத்தைக் கூறி மாபெரும் வெற்றியைச் சுவைக்க உள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், மூன்று பெரிய தொகையான ரூபாய் முப்பதாயிரத்தை வாக்குறுதியாக அளித்தபோதும், அது எதிர்பார்த்த வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள "அசுர வலிமை" வெறும் தேர்தல் வியூகம் மட்டுமல்ல, அது திட்டங்களின் நம்பகத்தன்மையையும், அவற்றைச் செயல்படுத்தும் நிர்வாகத் திறமையையும் சார்ந்தது என்பதை இந்த முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் கடந்த ஓராண்டு முழுக்க பீகாரில் நலத்திட்டங்கள் மழை போல பொழிந்தது. ஆனாலும், இந்த தேர்தல் முடிவுகள் பாஜக -வுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025ன் முடிவுகள் வெளியாகியது, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட முன்னிலை பெற முடியாமல், போனது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கட்சியான ஜன் சுராஜ் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது, ஆனால் தேர்தல் முடிவுகள் pk -விற்கு எதிராக அமைந்துள்ளது.
இந்த தேர்தலில் மேலும் பல சுவாரசியமான வெற்றிகளும் நிகழ்ந்துள்ளன. அதில் ஒன்றுதான், மொகாமா சட்டமன்ற தேர்தல் முடிவு.
சிறைசென்றவர் வென்றது எப்படி!?
தலைநகர் பாட்னாவில் உள்ளது மோகமா சட்டசபை தொகுதி. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பிரபல தாதாவுமான அனந்த் சிங் என்பவரின் மனைவி நீலம் தேவி தான் இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., ஆவார். இந்த ஆனந்த் சிங் அப்பகுதியில் முக்கியமான தாதா -வாக அறியப்படுகிறார்.
இந்நிலையில் அனந்த் சிங்கை எதிர்த்து ஜன் சுராஜ் சார்பில், பிரியதர்ஷி பியுஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, மோகமா தொகுதியில் ஜன் சுராஜ் நிர்வாகி துலர் சந்த் யாதவ், கடந்த அக்டோபர் 30 ல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகளுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோதலில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஆனந்த் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஜன் சுராஜ் நிர்வாகி துலர் சந்த் யாதவ் கொலை தொடர்பாக, மோகமா தொகுதியின் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், பிரபல தாதாவுமான அனந்த் சிங்கை, பார் பகுதியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரது உதவியாளர்கள் மாணிகந்த் தாக்குர், ரஞ்சித் ராம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் 2 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் இன்று பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆனந்த் சிங் வெற்றி
மொகம்மா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தல் சார்பில் போட்டியிட்ட வீனா தேவி, ஐன்சுராஜ் சார்பில் போட்டியிட்ட பிரியதர்ஷினி பியூஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 91416 வாக்குகளை பெற்று ஆனந்த் சிங் வெற்றி பெற்றுள்ளார். கொலை வழக்கில் சிறையிலிருந்துகொண்டே ஆனந்த் சிங் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.