"EVM-களில் சீல் இல்லை" - இத்தனை முறைகேடுகளை மீறி ஜனநாயகம் எப்படி வெல்லும்? தவெக வெற்றியை கேள்வி கேட்ட அதிமுக! 
தமிழ்நாடு

"EVM-களில் சீல் இல்லை" - இத்தனை முறைகேடுகளை மீறி ஜனநாயகம் எப்படி வெல்லும்? தவெக வெற்றியை கேள்வி கேட்ட அதிமுக!

"இன்று மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 11, 71, 133, 169 ஆகிய பூத்களின் EVM-கள் செயலிழந்ததாகவும், பல EVM-களில் சீல் இல்லை என்றும் எதிர்க்கட்சி முகவர்களின் குற்றச்சாட்டு" - ஐ.எஸ்.இன்பதுரை.

மாலை முரசு செய்தி குழு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலில் தவெக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியை "ஆளுங்கட்சியின் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம் எனும் குற்றச்சாட்டு!" என விமர்சித்துள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி ஐ.எஸ்.இன்பதுரை.

அவரது பதிவில், "ஆளுங்கட்சியின் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம் எனும் குற்றச்சாட்டு! - தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வரின் ரேக்ளா உலா - தேர்தல் பிரசாரத்தில் மாட்டு வண்டிப் பயணம் மூலம் விலங்குகளை பயன்படுத்தி தேர்தல் விதிமுறை மீறல் என அடுக்கடுக்காய் எழுந்த புகார்.

தாராபுரம் அதிமுக வேட்பாளரை முடக்க அவர் மீது FIR பதிவு - டிபன் பாக்ஸ் மூலம் பணப்பட்டுவாடா என வரிசை கட்டும் சர்ச்சைகள்! இதற்கெல்லாம் மேலாக, இன்று மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 11, 71, 133, 169 ஆகிய பூத்களின் EVM-கள் செயலிழந்ததாகவும், பல EVM-களில் சீல் இல்லை என்றும் எதிர்க்கட்சி முகவர்களின் குற்றச்சாட்டு - கேள்வி முகவர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல் - தட்டிக் கேட்டு போராடிய சுயேச்சை வேட்பாளர் டாக்டர் மூர்த்தி வலு கட்டாயமாக வெளியேற்றம் என தொடரும் இத்தனை தேர்தல் முறைகேடுகளையும் மீறி ஜனநாயகம் எப்படி வெல்லும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்