சொல்லியடித்த விஜய்.. அதிமுக சொதப்ப எடப்பாடிதான் காரணமா.. திமுகவின் பலம் இவ்வளவுதானா?

அதிமுக வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளிலுமே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பெரும் பின்னடைவாகும்.
Vijay Scores Big: Is Edappadi to Blame for AIADMK’s Slump? Is DMK’s Strength Limited?
சொல்லியடித்த விஜய்.. அதிமுக சொதப்ப எடப்பாடிதான் காரணமா.. திமுகவின் பலம் இவ்வளவுதானா?AI Generated
Published on: 
Updated on: 
1 min read

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது சாதாரணமான ஒன்றுதான் என்றாலும், இந்த முடிவுகள் பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெறும் அளவுக்கு உறுதியான கட்சியாக இருப்பதை தவெக நிரூபித்துள்ளது.

அதிமுகவில் இருந்து வெளியேறிய வேட்பாளர்களுக்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதுவே அதிமுகவின் பரப்புரையின் மையமாகவும் இருந்தது.

எனினும், விஜய் இரு தொகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்திய பிறகு, கள நிலவரம் மாறியது.

கடந்த முறை மூன்றாவது இடத்தைப் பிடித்த தொகுதியிலும்கூட வெற்றி பெற்றிருப்பதில் புதிதாக இணைந்த கூட்டணிக் கட்சிகளின் பங்கும் இருக்கலாம். ஆனாலும், விஜய் என்ற பிம்பத்தின் ஈர்ப்பு குறையவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தவெக அறிவித்த விவசாயக் கடன் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, மின்வெட்டு, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள், பல அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டுப் பின்வாங்குவது எனப் பல விமர்சனங்களையும் கடந்து இந்த வெற்றியைத் தவெக பெற்றுள்ளது.

தவெக வெற்றி பெறும் என்பது மட்டுமல்லாமல், திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறியதுகூட பலித்துள்ளது. அதிமுக வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளிலுமே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பெரும் பின்னடைவாகும்.

இது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகிய மக்கள் மத்தியில் பரிச்சயமான தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டிருந்தால், அதிமுக இந்த நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்த்திருக்கலாம். எடப்பாடி பழனிசாமி உள்கட்சிப் பிரச்சினைகளைக் கிடப்பில் போட்டுவிட்டுத் தேர்தலை எதிர்கொண்டதன் பின்விளைவாக இது பார்க்கப்படுகிறது.

கூட்டணி இல்லாமலேயே இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது திமுகவின் பலத்தைக் காட்டுகிறது. குறிப்பாக, மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்த மதுராந்தகத்தில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், இரண்டு தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை என்பதுதான் பேசுபொருளாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் தவெகவின் எதிர்ப்பைச் சமாளிப்பது திமுகவுக்குக் கடினமாக இருக்கும்.

கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரையில், தேர்தல் தோல்வியோ, வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்குகளைப் பெறாததோ அவர்களின் அரசியல் வீரியத்தைப் பாதிக்காது. ஆனால், இந்தக் குழப்பமான சூழலிலும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெறவில்லை என்பது அக்கட்சிக்குப் பெரிய பின்னடைவாகும்.

Vijay Scores Big: Is Edappadi to Blame for AIADMK’s Slump? Is DMK’s Strength Limited?
மதுராந்தகத்தில் மரண அடி.. தாராபுரத்தில் தடுமாற்றம்.. எடப்பாடி அஸ்தமனம் ஆரம்பம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com