தமிழ்நாடு

15 நாட்களாக தண்ணீர் வரவில்லை....! புதுக்கோட்டையில் கிராம மக்கள் சாலை மறியல்...!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் பைப்பை தனி நபர்கள் பயன்படுத்துவதால் பேயடிகோட்டை கிராமத்திற்கு தண்ணீர் 15 நாட்கள் வரவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியல். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா பேயடிகோட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் பைப் லைன் அருகில் இருக்கின்ற கிராமங்களில் தனி நபர்கள் வீடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், பேயடிக்கோட்டை கிராமத்திற்கு கடந்த 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடம்பூர் அருகே கரூர் சாலையில்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிகாரிகள் தெரிவிக்கும் போது, இது போன்ற தனிநபர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினுடைய பைப்பை பயன்படுத்தினால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

தொடர்ந்து, அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.