தமிழ்நாடு

தகராறு செய்ததால்தான் அதிமுகவினர் மீது...!!!

Malaimurasu Seithigal TV

அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்து வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

கடன் தள்ளுபடி:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடிக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும்ம் புதிதாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சுய உதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடிக்கான அட்டையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

வாக்குறுதியின் படி:

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி மகளிர் சுய உதவி குழுவினருக்கு  விருதுநகர் மாவட்டத்தில் 33 கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் புதிதாக 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மீண்டும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.  

ரூபாய் 1000:

மேலும் மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக முதலமச்சரால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது எனவும் விவசாயம் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்

சிலிண்டர் விலை:

தொடர்ந்து பேசிய அவர் ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணியில் ஒரு மாதத்தில் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும் அதிமுகவினர் மீதான வழக்கு தொடர்பான கேள்விக்கு தகராறு செய்ததால்தான் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்  அதனோடு அண்ணாமலைக் குறித்து பேசும் போது அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார் எனவும் பேசினார்.  மேலும் சிலிண்டர் விலை உயர்வுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எந்த  சம்பந்தமுமில்லை எனவும் தெரிவித்தார்.