One Year After Karur Tragedy 
தமிழ்நாடு

"என் வாழ்நாளில்".. இன்று காலையிலேயே.. முதல்வர் விஜய் கண்ணீருடன் வெளியிட்ட அறிக்கை!

பெரும் துயரமாக 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கிய ஒரு பேரதிர்ச்சியாக மாறியது.

Vinvizhi Leninton

இன்று கரூர் துயர சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் இன்று காலையில் முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தனது அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

கரூர் துயர சம்பம் ஒரு பார்வை:

2025-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவரான நடிகர் விஜய் அன்றைய நாளில் தேர்தல் பரப்புரைக்காக கரூர் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது வருகையானது குறிப்பிட்ட நேரத்தைவிட கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தாமதமானது. இதனால் அந்த பகுதியில் கூட நெரிசல் அதிகமானது.

விஜய் ஒரு 'ஸ்டார்' என்பதால் அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குழந்தைகளுடன் அந்த இடத்தில் கூடியிருந்தனர். அன்றைய நாளில் நாமக்கலில் பரப்புரை செய்த விஜய் அங்கிருந்து புறப்பட காலதாமதமாகிவிட்டது. மேலும், நாமக்கலில் இருந்து விஜய் கரூர் வருவதற்குள் இருள் சூழ தொடங்கியது.

ஆனாலும், விஜய்யை காண மக்கள் சாரை சாரையாக அங்கு கூடியிருந்த்த்தனர். மேலும், இதுபோன்ற ஒரு பெருந்துயர சம்பவம் நடக்கும் என்பது அன்றைய நாளில் யாரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது.

கரூர் வேலுசாமிபுரத்தில் வெறும் 10,000 பேர் மட்டுமே பங்கேற்க அரசு அனுமதியளித்திருந்தது. ஆனால், அந்த இடத்தில் 30,000 பேருக்கு மேல் கூடிருந்தனர். இதுவே கூட நெரிசலுக்கு முதல் காரணமாக அமைந்தது.

இதனையடுத்து, இரவு 7 மணிக்கு மேல் விஜய் மக்களுக்கு நடுவே தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அப்போது திமுக, அதிமுக போன்ற கட்சிகளை விமர்சித்தபடி விஜய் மக்களிடையே பேசினார். இவ்வாறு தேர்தல் பரப்புரை போய்க்கொண்டிருக்க, இரவு 7.40 மணியளவில் திடீரென கூட்டநெரிசல் ஏற்படத்தொடங்கியது.

நிகழ்வு நடந்தது ஒரு சிறிய இடம் என்பதால், உள்ளே நுழைந்தவர்கள் வெளியே செல்லமுடியாமல் தவிக்க ஒருவரை ஒருவர் முன்னடியடிக்க ஆரம்பித்தனர். இதனால், பலரும் நெரிசலில் மயங்கி கீழே சரிந்தனர்.

இந்த விவகாரத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட்ட நிலையில், பெரும் துயரமாக 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கிய ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்த விவகாரத்தில் சரியான திட்டமிடல் இல்லாமை, பாதுகாப்பு பணிகளில் பிரச்சனை உள்ளிட்டவையே காரணம் என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

மேலும், அன்றைய நாளில் கரூர் கண்ணீரில் மூழ்கியது. மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் தவெக தலைவர் விஜய் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதோடு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கடந்த ஜூலை 10-ம் தேதி 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிக்கான பணியாணைகளை நேரில் வழங்கினார் முதல்வர் விஜய்.

ஓராண்டு அஞ்சலி:

இந்நிலையில் இன்று (செப் 27) காலையில் முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அதில் அவர்,

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27.

என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி

என்று பதிவிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் விஜய்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்