Tamil Nadu Karnataka issue 
தமிழ்நாடு

"சம்பந்தம் இல்லாத கருத்துகளை.." அமைச்சர் நிர்மல் குமாருக்கு அறிவுரை கூறிய சபாநாயகர்! இன்றைய சட்டமன்றத்தில் கிளம்பிய அமளி

அமைச்சர் நிர்மல் குமாரை "அமைச்சர் உட்காருங்க" என்று மீண்டும் மீண்டும் சபாநாயகர் கூறினார்.

Vinvizhi Leninton

இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில், 3 தமிழர்கள் கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கவன ஏற்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கர்நாடக மாநிலம் சாமராஜநகர் பகுதியில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 3 தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். கர்நாடகாவின் ஹனுர் தாலுகாவில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று குடியேறிய சில தமிழ் குடும்பங்கள் வசித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் பேசினார். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடலை வாங்க மறுத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, கர்நாடக அரசு தற்காலிகமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கியது. மேலும், கர்நாடக அரசு சார்பில் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தபின்னர் உடற்கூராய்விற்கு பின்னர், 17.08.2026 அன்று ஒப்படைக்கப்பட்டது என்று அமைச்சர் நிர்மல் குமார் அவையில் பேசினார்.

மேலும், அந்த குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடுகள் வழங்குவது பற்றி ஆலோசிப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பேசினார். மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார். மேலும், முதல்வர் கர்நாடக அரசின் விளக்கம் ஏற்று கொள்ளதக்கதாக இல்லை என்றும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்றும், இந்த மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கூறியதை அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டு பேசினார்.

இதனைத்தொடர்ந்து, "உலகமெங்கிலும் இருக்கும் தமிழர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஒரே நம்பிக்கை நமது முதல்வர் விஜய். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரலாக முதல்வரின் குரல் கண்டிப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் தமிழ் பாசம் தமிழர்கள் பாசம் இருக்கும். அது அனைத்தையும் வரலாற்றில் நாம் பார்த்ததுதான். 2009-ல் 3 மணிநேர ஒரு அடையாள உண்ணாவிரத நாடகம்..." என்று அவர் பேசி கொண்டிருந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவைத்தலைவர், இது குறித்து பேசவேண்டாம் என்று கூறினார். ஆனாலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமாரை "அமைச்சர் உட்காருங்க" என்று மீண்டும் மீண்டும் சபாநாயகர் கூறினார்.

ஆனாலும் அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ச்சியாக அமலுக்கு நடுவே பேசிக்கொண்டே இருந்ததால் அவையில் சசலப்பு மேலும், அதிகரித்தது. இதனையடுத்து, அமைச்சர் கவன ஈர்ப்பு ஒட்டிப்பேசியவை மட்டும் அவைகுறிப்பில் இருக்கும், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தம் இல்லாத கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும். யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டிய கருத்துகளை மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும்" என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதையடுத்து சபையில் அமைதி வந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்