கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் பேசியதாவது கோவை பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்ற நூல் கொள்முதலில் நடைபெற்ற மோசடியை வெளி கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த ஊழல் மூடி மறைந்திருக்கும். நூலகத்தில் நூல்களுக்கிடைய குப்பைகளை வைத்திருக்கின்றனர்.
புத்தகங்களின் தலைப்புகள் மற்றும் அதனுடைய கருத்துக்களை பார்க்கும்போது மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக தெரிய வருகிறது. அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களுக்கும் திமுக தான் அனுமதி கொடுத்தது என்று சொல்கிறார்கள்.
எந்த ஆட்சி காலமாக இருந்தாலும் சரி முறைகேடு மோசடி நடைபெற்றிருந்தால் அதனை முழுமையாக விசாரணை செய்து அதற்கு காரணமாக யாராக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். விஜய் என்கிற பெயரில் ஏராளமான எழுத்தாளர்கள் உற்பத்தியாகி இருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்து விஜய் என்கிற பெயரில் ஒரு புத்தகம் கூட இல்லை. இது வழக்கமான காவல்துறை விசாரணை போல நடத்தினால் முழு உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது எனவே சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து இதனை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மோசடியான, உண்மைக்கு தொடர்பான நூல்கள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்.
தமிழ் அறிஞர்கள் குழுவைக் கொண்டு அதன் நூல்களை அப்புறப்படுத்தும் வேலையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த நூலை கொள்முதல் செய்து அதனை நூல்களை வாங்கி நூலகத்தில் வைத்திருப்பதற்கும் பரிந்துரைப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. ஏதோ சில எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று அகல் விளக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் மோகன் தெரிவித்திருக்கிறார். அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒரு அறிவு மோசடி இதனை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் குழுவை அமைத்தது. ஆனால் இன்று அந்த குழு கலைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழு கலைக்கப்பட்டு இருக்கக்கூடாது. அரசியல் சாசனம் பாதிக்கப்படக்கூடாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்