Poonamallee–Vadapalani Metro 
தமிழ்நாடு

"வந்தாச்சி புது மெட்ரோ" பூந்தமல்லி முதல் வடபழனி வரை.. முதல்வரும், பிரதமரும் பயணித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் - 3 நாட்கள் இலவசமா?

மெட்ரோ பயன்பாடானது இன்று மாலை 4 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vinvizhi Leninton

இன்று பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ சேவையை முதல்வர் விஜயுடன் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக முதல்வர் விஜய் நேரடியாக விமான நிலையம் சென்ற நிலையில் சாலை மார்க்கமாக போரூர் மெட்ரோ நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற இருவரும் மெட்ரோவில் பயணம் மேற்கொண்டனர்.

தனி விமானம் மூலமாக சென்னை வந்த பிரதமரை முதல்வர் விஜய், ஆளுநர் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக-வின் முக்கிய பிரமுகர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் மோடி இருவரும் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வரை பயணம் மேற்கொண்டனர். மேலும், பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ வரை உள்ள வழித்தடங்களாவன, பூந்தமல்லி புறவழி சாலை, பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு, வடபழனி உள்ளிட்ட 11 வழித்தடங்கள் உள்ளன.

மேலும், இந்த மெட்ரோ பயன்பாடானது இன்று மாலை 4 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முதல்வரும், பிரதமரும் மெட்ரோவில் பயணம் மேற்கொண்டபோது, மெட்ரோ அதிகாரிகள் மெட்ரோ அமைப்பதற்கு செய்யபட்ட செலவுகள், திட்டங்கள், பொதுமக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?, மெட்ரோ இயக்கப்படும் நேரம் உள்ளிட்டவற்றை பற்றி விவரித்தனர். மேலும், இந்த மெட்ரோ பயன்பாடானது, அரை மணிநேரத்திற்கும் குறைவாக பூந்தமல்லி-யில் இருந்து வடபழனி vanthadவந்தடையும் என்றும், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கு இந்த மெட்ரோவானது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அடுத்த 3 நாட்களுக்கு இலவசமாக இந்த வழித்தட மெட்ரோவில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வரும் நாட்களில் கட்டண சேவையானது பயன்பாட்டிற்கு வரும் என்றும், கட்டணமானது ரூ. 10-லிருந்து ரூ. 40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

விடுமுறை நாட்கள் மற்றும் 'பீக் ஹார்ஸ்' இல்லாத நேரத்தில் 15 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோவும், 'பீக் ஹார்சில்' 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோவும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ தொடக்க விழாவினை தொடர்ந்து சென்னை ஐஐடி-யில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில் முதல்வரும், பிரதமரும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி சென்னையில் ரூ. 13,000 கோடி-யில் வளர்ச்சி பணிகளை துவங்கி வைக்கப்போவதாகவும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்போவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னை ஐஐடி வளாகத்தில் இசைஞானி இளையராஜாவிற்காக அமையவிருக்கின்ற இசை பயிற்சி மையத்தையும் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக, இன்று மாலையே அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்