"அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" அன்புமணி தவெக கூட்டணியில் இணைகிறாரா?.. அவரே சொன்ன பதில்!

"சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்." - அன்புமணி அட்வைஸ்
Anbumani Ramadoss Responds to Rumors of Alliance with TVK
"அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" அன்புமணி தவெக கூட்டணியில் இணைகிறாரா?.. அவரே சொன்ன பதில்!
Published on: 
Updated on: 
1 min read

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நேற்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுகவுக்கு அறிவுரை வழங்கியுள்ள அன்புமணி, தவெக கூட்டணியில் இணையத் திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

"காசு கொடுக்காத இடைத்தேர்தல்"

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இடைத்தேர்தல் சுமுகமான ரீதியில் நடைபெற்றுள்ளது. கடந்த கால இடைத்தேர்தல்கள் எல்லாம் எடைத்தேர்தலாகத்தான் நடந்தன. எடைக்கு எடை பணம், பொருள் என மக்களை ஆடு, மாடுகளைப் போலக் காசு கொடுத்து, மது கொடுத்து வாங்கித்தான் நடைபெற்றன."

"இந்த இடைத்தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பணம் கொடுக்காமல் தகுந்த முறையில் நடந்து கொண்டுள்ளன. பிரச்சாரம் செய்துள்ளன. இதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது."

அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும்

மேலும் பேசிய அன்புமணி ராமதாஸ், "அதே நேரத்தில், இந்த இரண்டு தொகுதிகளிலும் ஐந்து மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற அண்ணா திமுக, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வெற்றிகளும் ஆளும் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

அதே நேரத்தில், சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

இதை நான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை. நல்ல விதமான ஆலோசனையாகத்தான் சொல்லுகிறேன்" என்றார்.

தவெக கூட்டணியில் பாமக?

தவெக கூட்டணியில் பாமக இணையுமா என்ற கேள்விக்கு, "தவெக கூட்டணிக்கு பாமக செல்வதாகச் சொல்லப்படுவதெல்லாம் வதந்திகள்தான்.

எங்களுக்கு அமைச்சர்கள் பதவி வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை; கேட்கப் போவதும் கிடையாது" எனப் பதிலளித்தார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம் பெறுவது குறித்து நிர்வாகிகள் கூட்டம் நடத்துவீர்களா என்ற கேள்விக்கு, "அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்" எனப் பதிலளித்தார்.

Anbumani Ramadoss Responds to Rumors of Alliance with TVK
சௌமியா அமைச்சர், விசிக-வுக்கு Bye Bye?.. மதுராந்தத்தில் பாமக வாக்குகளுக்கு போட்டி! தவெக திட்டம் பலிக்குமா?
Anbumani Ramadoss Responds to Rumors of Alliance with TVK
DMK: தவெக அலையால் மாற்றங்களை சந்திக்கும் எதிர்க்கட்சி; அதிமுக, பாமக, விசிக செய்ய வேண்டியது என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com