pmk founder ramadoss 
தமிழ்நாடு

“கலைஞரின் பாணியைத்தான் நான் பின்பற்றுகிறேன்” - இறங்கி வராத ராமதாஸ்…! அடம்பிடிக்கும் அன்புமணி..! -

நான் கஷ்டப்பட்டு இந்த கட்சியை வளர்த்தது போன்ற எந்த அரசியல் கட்சித் தலைவரும் பாடுபட்டிருக்க மாட்டார்கள். நான்கைந்து பிரதம மந்திரிகளோடு ....

Saleth stephi graph

கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். இதுக்கா பாமக -வில் பெரும் பதற்றத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

கடந்த 2024 -ஆம் ஆண்டு ராமதாஸின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மேடையிலேயே அன்புமணி காட்டமாக பேசியிருந்தார். இதுதான் கட்சியின் பிரச்சனைக்கு துவக்கப்புள்ளி. அப்போது தொடங்கிய தந்தை - மகன் பூசல் இதுநாள் வரை நீடிக்கிறது. மேலும் ராமதாஸ் கட்சியிலிருந்து விலக்கும்  நிர்வாகிகளை எல்லாம்  அன்புமணி மறு நியமனம் செய்து வருகிறார். இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர். 

அருள் நீக்கம்!

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அருள் பதவியை பறிப்பதாக அன்புமணி நேற்று அறிவிப்பு விட்டிருந்தார். இந்நிலையில்  அவரை மாநில இணை பொதுச்  செயலாளராக நியமனம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை என்பதால் செய்தியாளர்களை சந்தித்த நிறுவனர் ராமதாஸ், “சட்டமன்ற உறுப்பினர் அருள் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரை மாநில இணை பொதுச்  செயலாளராக நியமனம் செய்துள்ளேன். தேர்தலுக்கு முன்பாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் அன்றும் மாநில செயற்குழு கூட்டமும் கூட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு இதுகுறித்து முடிவு செய்யப்படும். மேலும் கூட்டணி குறித்து பொதுக்குழுவில்தான் முடிவு எடுக்கப்படும். மேலும் முகுந்தன் மற்றும் ஜி.கே மணி ஆகியோரை அன்புமணி ஏற்றுக் கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு  “யாம் அறியோம் பராபரமே”  என்று பதில் கூறினார் . அன்புமணி மூன்று ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்த நிலையில் தற்போது நான் பட்ட கஷ்டத்திற்கு தலைவர் பதவியில் இருக்கலாம் என்று எனது மனசாட்சி கூறியதால் நான் தலைவர் பதவியில் நீடிக்கலாம் என்று விரும்புகிறேன். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளை தாங்கிக் கொண்டு பல்வேறு பேச்சுகளை தாங்கிக் கொண்டு இந்த கட்சியை வளர்த்துள்ளேன். நான் கஷ்டப்பட்டு இந்த கட்சியை வளர்த்தது போன்ற எந்த அரசியல் கட்சித் தலைவரும் பாடுபட்டிருக்க மாட்டார்கள். நான்கைந்து பிரதம மந்திரிகளோடு நெருங்கி பழகியவன் நான் தற்போது உள்ள பாரத பிரதமருக்கம்  என் மீது நல்ல அன்பு வெளிப்படுத்தினார். காற்று கூட உள்ளே நுழைய முடியாத அளவிற்கு என்னை கட்டிப்பிடித்து நெகிழ்ந்து பாராட்டினார்.  இந்த கட்சி சுயம்புவாக நானே உருவாக்கிய கட்சி . இதில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மத்திய இணை அமைச்சரையும் உருவாக்கியுள்ளேன். ஓர் ரயில் பயணத்தின் போது எங்களது கட்சியின் நிர்வாகி ரயில்வே துறை என அமைச்சராக இருந்ததால் அவருக்கு சிறப்பு வகுப்பு ஒதுக்கப்பட்ட நிலையில் எவ்வளவு வற்புறுத்தியும் நான் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தேன். என் மூச்சிருக்கும் வரையில் நான் தலைவராக இருக்கும்  நிலையில், எனக்குப் பிறகு இந்த கட்சியின் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வர முடியாது என்றும் அன்புமணி தான் வருவார் என்று தெரிவித்தார். நான் இருக்கும் வரை நானே தலைவர் அன்புமணி செயல்தலைவர், இது எனது மறைந்த நண்பர் கலைஞரின் பாணி தான்” என்று அவர் பேசியுள்ளார். இதன் மூலம் ராமதாஸ் தந்து நிலைப்பாட்டை மாற்றிகொள்ளப்போவது இல்லை உறுதியாக தெரிகிறது. இந்த பூசல் இப்படியே நீடித்தால் அது கட்சிக்குத்தான் ஆபத்து என்கின்றனர் ஆர்வலர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.