2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், தவெக 108 இடங்களை பெற்று வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து தவெக ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை எனக் கூறி பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் ஆட்சியமைக்க அழைப்பு விடுகிறேன் என்று ஆளுநர் கூறியதை அடுத்து ஆட்சியமைப்பது இழுபறியானது. பின்னர் தவெக சார்பில் விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் நிபந்தையின்றி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறினர். மேலும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து முழுவதுமாக விலகி தவெக-வுடன் இணைந்தது. இதனையடுத்து தவெக ஆட்சியமைக்க 120 இடங்கள் கிடைத்தது. நேற்று (மே 10) அன்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக நேரு உள்விளையாட்டரங்கில் பதவி ஏற்றார்.
தவெக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை இருந்த போதே அதிமுக இடையே தனி தனியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் தவெக-வுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பிறகும் சி.வி. சண்முகம் தலைமையில் தவெக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரி, அதிமுக மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுயள்ளன. தொடர்ந்து தேர்தலில் தோல்வியை சந்தித்து வருவதால் முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த அணியில் சி.வி. சண்முகம் தலைமையில் எஸ்.பி. வேலுமணி போன்ற முக்கிய புள்ளிகள் உள்ளனர். தற்போது, 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அது எதிரொலித்துள்ளது. எடப்பாடி தலைமையில் ஒரு அணியினரும், சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியினரும் சட்டப்பேரவைக்கு வந்துள்ளது பேசுபொருளானது. மேலும், தற்காலிக சபாநாயகர் அழைத்தும் சி.வி. சண்முகம் பதவியேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும், எஸ்.பி. வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது பலரும் மேசையில் கைதட்டி நிலையில், எடப்பாடி உறுதிமொழி கூறியபோது சிலர் மட்டுமே மேசையில் கைதட்டியுள்ளனர். மேலும், அடுத்து எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்ய அதிமுக MLA-க்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சி.வி. சண்முகம் உறுதிமொழி கூறாத நிலையிலும், திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் தனது MLA பதவியை ராஜினாமா செய்ததையடுத்து காலை 9.30தொடங்கிய சட்டப்பேரவையில் 232 MLA-க்கள் உறுதிமொழி எடுத்து பதவி பிரமாணம் செய்துள்ளனர். தற்போது எஸ்.பி. வேலுமணி செந்தில் பாலாஜியுடன் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பேச்சு வார்த்தை அரசியல் வட்டாரத்தில் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.