தமிழ்நாடு

“மட்டன் குழம்பில் இருந்த தேரை” - உணவருந்த சென்ற குடும்பத்திற்கு.. ஹோட்டல் கொடுத்த அதிர்ச்சி!

இந்த ஓட்டலில் நேற்று ஒரு குடும்பத்தினர் மதியம் உணவு சாப்பிட சென்றுள்ளனர்

Mahalakshmi Somasundaram

வாரத்தின் ஆறு நாட்களும் குடும்பத்திற்காக சமைக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு நாளாவது விடுமுறை அளிக்கும் எண்ணத்திலும். வாரம் முழுவதும் வேலை வேலை என ஓடி குடும்பத்துடன் வார இறுதியில், ஒரு நாளாவது வெளியில் சென்று சாப்பிட்டு நேரம் செலவிடுவோம் என்றும்,விடுதியில் தங்கியுள்ள  இளைஞர்கள் ஒரு நாளாவது பிடித்ததை உண்போம் என நினைத்தும், வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் உணவகங்களை தேடி கூட்டம் கூட்டமாக செல்லும் இன்றைய சூழலில்.பூந்தமல்லியில் இருக்கும் ஒரு தனியார் உணவகத்தில் இன்று நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி என்ற தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று ஒரு குடும்பத்தினர் மதியம் உணவு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஒரு பிரியாணி மற்றும் அசைவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். 

இந்த நிலையில் ஊழியர்கள் கொண்டு வந்து கொடுத்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற போது, அதில் பெரிய அளவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தனியாக எடுத்து பார்த்தபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, அந்த மட்டன் குழம்பில் முழு தேரை ஒன்று அப்படியே இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து அங்கு உணவருந்த வந்தவர்களும் இதனை அறிய  அனைவரும் ஹோட்டல் நிர்வாகத்திடம் இதை குறித்து கேட்ட நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஹோட்டலில் நடந்ததை வீடியோவாக எடுத்த குடும்பத்தினர்  அந்த வீடியோவைசமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய அந்த காணொளியை அடுத்து, இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு உணவுகளில் சிறு சிறு பூச்சிகள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள் இருந்த நிலையில் முழு தேரை உணவில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் நகராட்சி அலுவலகம் அருகிலேயே இந்த ஓட்டல் இருப்பதால் .நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இந்த ஓட்டலின் தரம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலவன் தலைமையில் வந்த குழு ஹோட்டலில் உள்ள ஒவ்வொரு அறையையும் சோதனை செய்த பின்னர் ஹோட்டலுக்கு சீல் வைத்து உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்