"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு"   "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு"
தமிழ்நாடு

"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" - திருமாவிற்கு துணை முதல்வர் பதவியா? அடுத்தடுத்து நடக்கும் அரசியல் திருப்பங்கள்!

'இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' கட்சி தவெக-விற்கு ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் தவெக-விற்கு ஆதரவு இல்லை என்று கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vinvizhi Leninton

தவெக ஆட்சியமைப்பதில் விசிக ஆதரவு கொடுக்கும் என்றும் அதற்கான அறிக்கை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், ஆட்சியமைக்க வேண்டிய 118 பெரும்பான்மை இல்லாததால், தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் நீடித்து வந்தது. இதனையடுத்து, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறியது. முன்னதாக காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-விற்கு ஆதரவு அளித்தது. இதனையடுத்து, திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் காங்கிரசை கடுமையாக சாடினர். தற்போது ஆட்சியமைப்பதற்கு தவெக-விடம் பெரும்பான்மை உள்ள நிலையில் நாளை காலை 11 மணியளவில் விஜய் நேரு உள் விளையாட்டரங்கத்தில் பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இடதுசாரிகளின் ஆதரவினைத் தொடர்ந்து விசிக சார்பில் ஆதரவு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விசிக சார்பில் இருந்து அவர்களின் ஆதரவு இடதுசாரிகளை போன்று வெளியில் இருந்து ஆதரவு தருவார்களா? அல்லது தவெக-வுடன் கூட்டணியா? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சிந்தனை செல்வன் தனது அதிகாரபூர்வ X தளபக்கத்தில் "தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம். எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை. உளிகளை கொண்டு செதுக்க அவர் வெறும் கல் அல்ல. எழுந்து நிற்கும் இமய மலை. நாளைய பொழுது நமக்காய் விடியும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்று அமைச்சரவையில் பங்கு கேட்கும் விசிக. "இது திருமா காலம் இனி உயர்வோம் மேலும்! மேலும்!" என்று வன்னியரசு குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக-வின் 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி கேட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. மேலும், திருமாவளவன் துணை முதல்வர் பதிவினை கேட்பாரா? இல்லை அமைச்சரவையில் மட்டும் பங்கு கேட்பாரா? என்று பலரிடையே கேள்வியினை எழுப்பியுள்ளது.

இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே திருமாவளவனுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் நாளை காலை அதற்கான பதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தவெக-விற்கு ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் தவெக-விற்கு ஆதரவு இல்லை என்று கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையில் தவெக தலைவர் விஜய், காரல் மார்க்ஸ்-க்கு மலர் தூவி மரியாதையை செலுத்தி இடதுசாரிகளுக்கு நன்றி கூறினார். மாலை 6 மணிக்கு ஆளுநரையும் சந்தித்து பதவி ஏற்பதற்கான அழைப்பு விடுக்க வேண்டிய தனது பெரும்பான்மையை தவெக தலைவர் விஜய் நிரூபித்துள்ள நிலையில் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது வரை ஆளுநர் மாளிகையில் இருந்து தவெக தலைவர் நாளை காலை பதவியேற்பது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.