நாளை காலை 11 மணிக்கு 'முதல்வராகிறார் விஜய்!' - நிரூபிக்கப்பட்டது பெரும்பான்மை - "கடைசி நேரத்தில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்"

பெரும்பான்மையை தவெக பெற்றுள்ளதால் நாளை காலை நேரு உள்விளையாட்டரங்கில் தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை பதவியேற்கிறார் விஜய்
நாளை பதவியேற்கிறார் விஜய் நாளை பதவியேற்கிறார் விஜய்
Published on
Updated on
1 min read

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஆட்சியை பிடித்து முதல்வராவதில் தவெக தலைவர் விஜய் சிக்கலை சந்தித்து வந்தார். பெரும்பான்மையாக 118 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலை இருந்தது. கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு வேண்டி தவெக சார்பில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக போன்ற கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும், இதில் காங்கிரஸ் நிபந்தனைகளுடன் கூட்டணியில் இணைவதாக கூறி திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-வுடன் இணைந்தது. இது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் 'முதுகில் குத்திவிட்டதாக' திமுகவின் முக்கிய புள்ளிகள் சார்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை (மே 8) திமுக MP கனிமொழி, திமுக காங்கிரசுக்கு இருந்த கூட்டணி முடிவிற்கு வந்த நிலையில் "திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் அவர்கள் அமரக்கூடாது" என்று கனிமொழி கடிதம் எழுதியதியுள்ளார்.

அதன் பின்பு இன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றார் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறி இணைந்துள்ளனர். மேலும், இடதுசாரிகள் என்ன முடிவெடுக்கிறார்களோ.. அதை பின்பற்றி முடிவு எடுக்கப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில் அவரும் தவெக-விற்கு ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அதிகாரபூர்வமான நாளை விசிக சார்பில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தங்களது ஆதரவினை வெளியில் இருந்து தருவதாக கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, பெரும்பான்மையை தவெக பெற்றுள்ளதால் நாளை காலை நேரு உள்விளையாட்டரங்கில் தவெக தலைவர் விஜய் பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இன்று மாலை 6 மணிக்கு ஆளுநரை சந்தித்து பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டி சென்றார் தவெக தலைவர் விஜய். இந்நிலையில் கடைசி நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தங்களது ஆதரவுகளை தெரிவித்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு ஆட்சியமைக்க வேண்டிய பெரும்பான்மையை பெற்றார். ஆளுநரை சந்தித்துவிட்டு இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று தனது நன்றியை தெரிவித்தார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டிய சந்தித்து நன்றியை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் சண்முகம், மேலும் அக்கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார் தவெக தலைவர் விஜய். இடதுசாரிகளை நேரில் சந்தித்து விஜய் நன்றி கூறிய நிலையில் நாளை காலை நேரு உள்விளையாட்டரங்கில் பதவி ஏற்பர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com