premalatha is upset with admk's stand on rajyasaba mp seat 
தமிழ்நாடு

“காத்திருந்து, காத்திருந்து..” ஒரு எம்.பி சீட்டுக்கா இவ்வளவும்! “நீங்க இல்லனாலும் பாதிப்பில்லை" - பிரேமலதாவை பதறவைக்கும் இ.பி.எஸ்!

“எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால்...

Saleth stephi graph

2026 தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ளது. ஆனால் அதிமுக -வில் இன்னும் அந்த நிலையற்ற தன்மை தொடர்கிறது.

அதிமுக -பாஜக கூட்டணி!

விஜய் -ன் அரசியல் பிரவேசம் தமிழ்நாடு அரசியல் களத்தில் உண்மையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். பெரும்பான்மை இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள தவெக பகிரங்கமாக திமுக -வை சாடி வருகிறது.

“எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான்  “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான். 

தேமுதிக -வை அலைக்கழிக்கும் எடப்பாடி!

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி தேமுதிக தான். ஏற்கனவே பேசி வைத்தபடி தேமுதிக -விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை பெறுவோம் என பிரேமலதா உறுதியாக நம்பினார். ஆனால் தேமுதிக -விற்கு வழங்கப்படும் எம்.பி சீட் குறித்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் எடப்பாடி நழுவிச்சென்றுள்ளார், மேலும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக -விற்கு சீட் ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ள.

2021 -ஆம் ஆண்டு தேர்தலின்போது விஜயகாந்த் என்ற ஆளுமை உயிரோடு இருந்தார் தற்போது அவர் இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

குறைந்த வாக்கு வங்கி!

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக மட்டும் தனித்து 26.93% வாக்குகளை பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 20.46 % வாக்குகளையும், பாஜக 11.24% வாக்குகளையும், காங்கிரஸ் 10.67 % வாக்குகளையும் புதிதாக மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி 8.10 % வாக்குகளையும் பாட்டாளி மக்கள் கட்சி 4.31% வாக்குகளையும், தேமுதிக 2.59 % வாக்குகளை மட்டுமே பெற்றது.  

இத்துணை குறைந்த வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு இது எதோ மிகப்பெரிய கட்சி போல பிரேமலதா நடந்துகொள்வதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் எடப்பாடி கட்சிக்காரர்களுக்கு எம்.பி சீட் விவகாரத்தில் முன்னுரிமை தருவார் என்று சொல்லப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் கூட்டணியில் தேமுதிக இருப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார். ஆனால் கூட்டணி குறித்து ஜனவரிக்கு பிறகே தெரியும் என பிரேமலதா கூறி  வருகிறார். இலவு காத்த கிளி போல உள்ளது பிரேமலதாவின் நிலைமை என்கின்றனர் ஆர்வலர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்