இன்று திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக எம்எல்ஏ அருள் “ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் விரைவில் சேர்வார்கள், இவர்கள் சேர்ந்தே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அன்புமணி எனது அண்ணன் அவர் என்னை தூக்கி வளர்த்தவர். எனக்கு யாரும் மன்னிப்பு கேட்க அவகாசம் விதிக்க வில்லை.
எனக்கு எப்போதும் ராமதாஸ் ஐயா தான் தலைவர் அவருக்கு அடுத்து அன்புமணி அண்ணா மட்டும் தான் தலைவர். எனக்கு பொறுப்பு கிடைத்தால் பொறுப்பில் இருந்து செயல்படுவேன். இல்லையெனில் எப்போதும் பாமக தொண்டனாகவே உழைப்பேன்” என கூறியுள்ளார். அடுத்தடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அருள் பதிலளித்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிறுவனர் ராமதாஸ் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில புலமையை அதிகரிக்க தமிழக அரசு கொண்டு வந்த “லெவல்” திட்டத்தை பாராட்டியும் அதை விரிவு படுத்தும் படியும் கூறினார். மேலும் டெல்டா மாவட்டங்களில் 5 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நிலையில் உரத்தட்டுப்பாடு ஏற்பட உள்ள நிலையில் அதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அவற்றை ஒட்டு வேலை பார்க்கும் செயலை செய்யாமல் முழுமையாக சரி செய்யுமாறு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக அதிக மக்கள் வாழும் பெரும் நகரங்களில் இந்த பணிகளை தொடங்கினால் நன்றாக இருக்கும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.