
இந்து முன்னணி சார்பில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் முருகர் மாநாடு இன்று மதுரை அம்மா திடலில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும் இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். தற்போது நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் வரவேற்புரை நிகழ்த்தியுள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியம்.
வரவேற்புரையை பேசிய சுப்பிரமணியம் “அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த மாநாட்டிற்கு கூட்டம் வரக்கூடாது, என 4 நாட்களாக விரதம் இருந்தாராம். இந்த மாநாட்டிற்கு விளம்பரம் நாங்கள் கொடுக்கவில்லை. சேகர் பாபுவும், திருமாவளவனும், வைகோவும் தான் இந்த மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்தார்கள்.
தமிழகத்தில் ஆன்மிகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது அரசியல் மாநாடு அல்ல. முதலமைச்சருக்கும் இந்த மாநாட்டில் அழைப்புக் கொடுக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினோம், அவரிடம் இருந்து பதில் இல்லை. அவர் வந்திருந்தால் இந்த மேடை அவருக்கும் கிடைத்திருக்கும். என பேசியுள்ளார் மேலும் இந்த மாநாட்டை நடத்த அனுமதி அளித்த நீதிமன்றத்திற்கு நன்றி கூறியுள்ளார் சுப்பிரமணியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.