தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 6 மாத காலங்களை கடந்து விட்டது. இந்த 6 மாத ஆட்சியில் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நிர்வாகிகள் மீதான குற்றசாட்டுகள் தொடர்ந்து விவாதப்பொருளாகி வருகின்றன. இந்நிலையில், தவெக அரசை விமர்சிக்கும் வகையில் மற்ற அரசியல் கட்சியினர், சமூக வலைத்தளங்களில் கண்டனங்களையும், மீம்-களையும் பதிவிட்டு விமர்சிப்பது தற்போது வழக்கமான ஒன்றாகியுள்ளது. சில நேரங்களில் பெரும் விவாதமாகவும் மாறியுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள ஏஐ காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் நடித்த திருவிளையாடல் படத்தின் வசனத்தை AI மூலம் மாற்றி தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையில் வசனங்களை பொருத்தி விமர்சித்திருந்தது. இது நேஷனல் மீடியா வரை பேசு பொருளானது. மேலும், திமுக, அதிமுக மற்றும் நாதக போன்ற கட்சியின் IT விங் பக்கங்கள், ஆளும் தவெக அரசு குறித்து ஏதேனும் விமர்சனம் பதிவு வெளியிட்டால் அதற்கு TVK IT விங் உடனடி பதில் கொடுக்கும்.
மேலும் அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை நினைவு கூர்ந்து மேற்கோள் காட்டும். ஆனால் இதுவரை பாஜக-வின் பதிவுகளுக்கு எந்த பதிலடியும் இல்லை. இதை அரசியல் விமர்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏன் பிஜேபி-க்கு பதில் இல்லை.. என்றும் பயமா என்றும் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் விஜய் மற்றும் ராகுல் காந்தியை விமர்சித்து ஒரு AI வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பாஜக. அந்த வீடியோவில் MR.பரத் என்ற படத்தில் இடம்பெற்ற, “என்னம்மா கண்ணு சௌக்கியமா” என்ற பாடலை சித்தரித்து தவெக அரசையும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளது. அதில் எதிர்க்கட்சி தலைவரை பப்பு என்றும், முதல்வர் விஜயை ரீல்ஸ் மாப்பு என்றும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.
மேலும் தேர்தல் வாக்குறுதிகள், SIR போராட்டம் என இரு காட்சிகளையும் அதன் செயல்பாடுளையும் பகடி செய்துள்ளது. மேலும் அந்த பாடல் வரியில், “காங்கிரஸ தா நம்பி… ஓ ஓ பயனில்ல தம்பி” என்றும் "நம்ம சேர்ந்த வெளங்காது.. அட வழி ஏதும் என்றும்” கட்டமாக விமர்சித்துள்ளது. மேலும் டெல்லி போராட்டங்கள் எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களை பாதித்தது என்று குறிபிட்டு காங்கிரசை சாடியுள்ளது. தமிழகத்தில் மெத் கடத்தல், குழந்தைகள் கடத்தல் குறித்து முதல்வர் வாய்திறக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவிற்காவது TVK IT விங் பதில் அளிக்குமா என ஏத்திக்கட்கள் மற்றும் அரசிய விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்