robo shankar  
தமிழ்நாடு

ரோபோ சங்கர் மரணம்; "அவரின் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டதே..." சோகத்தில் மூழ்கிய கோலிவுட் !!

நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை ....

மாலை முரசு செய்தி குழு

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ரோபோ சங்கர்.

சின்னத்திரையிலிருந்து படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரைக்கு சென்றார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு தனுஷின் ‘மாரி’ திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் பல முக்கிய நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.

இதனிடையே நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். பின்னர் உடல்நலம் சிறிது முன்னேறி மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வந்தார்.  

இந்த சூழலில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை துரைப்பாக்கத்தில் 'காட்ஸில்லா’ படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உள்ளார். இவரை  உடனடியாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.

திரைபிரபலங்கள் அஞ்சலி!! 

இவரின் இந்த எதிர்பாரா மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் பல சின்னத்திரை பிரபலங்கலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பல வாய்ஸில், சிறப்பான பாடி லேங்குவேஜை வெளிப்படுத்தக் கூடிய ரோபோ சங்கர் கமலின் தீவிர ரசிகர். கமலுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை தான் அவரின்  பெரு விருப்பமாக இருந்துள்ளது. ஆனால் அது நிறைவேறுவதற்குள்ளாகவே இப்படி அசம்பாவிதம் நடந்துள்ளதாக அவரின் நண்பர்கள் உருக்கம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.